வியாபாரத்தில் லாபம் கொட்டும்.. ஆனாலும் அந்த ஒரு விஷயத்தில் கவனம் – மீனம் ராசி மாசி மாத பலன்கள்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் தற்போது தை மாதம் முடிவடைந்து மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாசி மாதத்தில் (13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மீன ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
ராசிக்கு 3, 8 இடங்களுக்கான அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்கிரம் பெற்று அமர்ந்துள்ளார். ராசிக்கு ஏழாம் இடத்தில் கேது அமர்ந்துள்ளார். உங்கள் ராசிக்கு 12வது இடமான அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன.

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) சூரிய பகவான் உங்கள் ராசியில் 11ஆம் இடத்தில் இருந்து 12ஆம் இடமான விரய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) நான்காம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் உங்கள் ராசிக்குள்ளேயே பெயர்ச்சியாக உள்ளார்.
புதன் உங்கள் ராசியில் நீச்சமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். ஒரு கிரகம் உச்சத்தில் இருந்து மற்றொரு கிரகம் நீச்சமாகும்போது. அதை நீச்சபங்க ராஜயோகம் என்பார்கள். இது நல்ல பலன்களை தரும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமாக போகிறார்.
சூரியன் 12ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு, வெளிமாநில வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். வருவாய் சீராக இருக்கும். எதிரிகள் பலவீனமடைவார்கள். சுப விரயம் ஏற்படும். கடன் சுமை குறையும். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தாயாரின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த காலத்தில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.
வியாபாரத்தில் விரிவாக்கம் இருக்கும். உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வெளிநாடு, வெளிமாநில பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உங்களின் பேச்சுத்திறமை அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கால் காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் வருவாயில் ஒரு பகுதியை முதலீடு செய்வீர்கள்.
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும். தாய் மற்றும் தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்காது. வயிறு வலி, தோல் ஒவ்வாமை, கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அவ்வபோது வந்து செல்லும்.
வாழ்க்கை துணையுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பிடிவாதம் அதிகரிக்கும். வீண் விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. பெண்கள் விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் ஆவணங்கள் மற்றும் நகைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். வண்டி, வாகனம் பயன்படுத்தும்போது கவனம் தேவை. அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவதால் பிரச்னைகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications