மே மாதம் மாஸ்! மேஷம், ரிஷபம் ராசிக்கு பணமும் முன்னேற்றமும் குவியும்!
மே மாத பலன்கள்: மே மாதத்தில் மேஷம் மற்றும் ரிஷபம் ராசியினருக்கு உத்தியோகம், வியாபாரம், பணவரவு, குடும்பம் போன்ற துறைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுமா, வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேஷம் (Mesham)
மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த அழுத்தங்களும் பிரச்சனைகளும் குறையும். மேலதிகாரிகளின் தொந்தரவு நீங்கி, சிலருக்கு இடமாற்ற வாய்ப்பும் அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரம்:
ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து மற்றும் வாகன உதிரி பாகங்கள் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் சேர்வர். வீட்டிலிருந்து தொழில் செய்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் அதிகரிக்கும்.
குடும்பம்:
நீண்டநாளாக சந்திக்க விரும்பிய நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதியருக்குள் நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும்.
கலைத் துறை:
கலைஞர்களுக்கு பொறுமையும் நம்பிக்கையும் அவசியம். முக்கியமான நபர்களின் உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்:
மாணவர்கள் உடல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை எடுத்துக்கொள்ளுவது நல்லது. தேர்வுகள் குறித்து சிறிய பதட்டம் இருந்தாலும், நன்றாக தயார் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு கோதுமை நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்ல பலனை தரும்.
ரிஷபம் (Rishabam)
ரிஷப ராசியினருக்கு பணமும் மதிப்பும் இருந்தாலும், எளிமை உங்கள் சிறப்பு. இதனால் சமூகத்தில் நல்ல செல்வாக்கை பெற்றவராக இருப்பீர்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகம்:
சம்பள பாக்கிகள் கைக்கு வரும். பழைய சொத்தை நல்ல விலையில் விற்று புதிய வீடு வாங்கும் வாய்ப்பு உருவாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும், அதை திட்டமிட்டு நிறைவேற்றுவார்கள்.
வியாபாரம்:
தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும், குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்தபடியே புதிய திறன்களை கற்றுக்கொள்வார்கள்.
குடும்பம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு எண்ணம் உருவாகி வங்கியில் தொகை சேமிப்பார்கள். மாமியார்-மருமகள் உறவு சுமூகமாக இருக்கும்.
கலைத் துறை:
கலைஞர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களின் படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெறும்.
மாணவர்கள்:
வெளிநாட்டில் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். உடலில் ஏற்படும் வலி போன்றவை குறையும்.
பரிகாரம்:
சனிக்கிழமை ஐயப்பனை வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications