கன்னி ராசிக்கு "இது திருப்பிக் கொடுக்கும் நேரம்".. மிகப்பெரிய ஜாக்பாட்.. தொழிலில் உச்சம்
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது கன்னி ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த மாதம் மிக அருமையான பலன்களை கொடுக்கும். இதுநாள் வரை உங்களுக்கு சிக்கலைக் கொடுத்து வந்த கேது பகவான் 12 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். இதுவே தடைகளை விலக்கி நல்ல பலன்களை கொடுக்கும். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகம், தொழில் நன்றாக இருக்கும். தொழில் விருத்தியாகும்.
பண வரவு
குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் விலகி நன்மைகள் நடைபெறும். பண வரவு திருப்தியாக இருக்கும். குழந்தைகளால் நன்மை பிறக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சமூகத்தில் பெயர், புகழ், பெருமை அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
வெற்றி
அதிகளவு இனிப்புகள் சாப்பிடுவீர்கள். அந்தளவுக்கு குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள், முயற்சிகளில் வெற்றி என்று நன்மைகள் நடைபெறும். 2, 4 ஆம் இடங்களுக்கு குரு பார்வை வருவது சிறப்பான பலன்ளை ஏற்படுத்தும். காரியங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகி திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்.
சொத்து
உத்யோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் இருக்கும். வீடு, கல்வி, தொழில் ஆகியவற்றிலும் எதிர்பார்த்த மாறுதல்கள் நிகழும். நான்காம் இடம் வலுபெறவதால் வண்டி, வாகனம் வாங்குவீர்கள். வண்டி, வாகனத்தில் ஆதாயம் உண்டு. நிலம், வீடு, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஆரோக்கியம்
சுப செலவுகள் நிச்சயம் உண்டாகும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி நிம்மதியான ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சொத்தில் இருந்த தடைகள் படிப்படியாக நீங்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த கால பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.
அதிர்ஷ்டம்
நண்பர்களால் ஆதாயம் உண்டு. இரண்டாம் அதிபதி உச்சமாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
ஆளுமை
சுய தொழில் செய்வோர், ஆசிரியர்கள், கலை மற்றும் ஊடகத்துறை, வழக்கறிஞர்கள், பால் உற்பத்தி ஆகிய துறைகளில் இருப்போருக்கு நல்ல உயர்வு நிச்சயம் உண்டு. உங்களின் ஆளுமைத்திறன் நன்கு வெளிப்படும். பொருளாதாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
கவனம்
அம்மா, அப்பா, கணவர், மூத்த மகன் ஆகியோரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் உங்களது உடல்நலத்திலும் எச்சரிக்கை தேவை. தொண்டை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நிதானம்
மே இரண்டாவது வாரத்துக்கு பிறகு வார்த்தைகளில் கவனம் தேவை. நியாபக மறதி ஏற்படும். விரய செலவுகள் இருக்கும். கூடா நட்பை தவிர்ப்பது நன்மை தரும். வயதானவர்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். லட்சுமி வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications