மீன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. 4 விஷயங்கள் இந்த ஆடியில் நடப்பது நிச்சயம்
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தனை

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம் ஆடி மாத பலன்
மீன ராசிக்காரர்களில் உத்திரட்டாதி நட்சத்திரக்கார்கள் நிறைய பாதிப்புகளைச் சந்தித்து வருவீர்கள். சிவன் வழிபாடு செய்பவர்கள் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆடி மாதத்தில் 4 விதமான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிறைய பேர் வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். கூடுதல் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வது, கடின உழைப்பால் ஒரு விஷயத்தை சாதிக்கும் வாய்ப்பு உருவாகும்.
முயற்சிகளில் வெற்றி
ராசிநாதனும், 3 ஆம் அதிபதியும் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் முயற்சிகள் அனைத்தும் வீடு சார்ந்து இருக்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் சுகம் சார்ந்து இருக்கும். வண்டி, வாகனம் சார்ந்த சிந்தனை உருவாகும். வீட்டை மாற்றுவது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, அம்மாவின் உடல்நிலை குறித்த சிந்தனை, நமது திறமை வெளிச்சத்திற்கு வராமல் சென்று விடுமா என்பது போன்ற சிந்தனைகள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது.
தொட்டது துலங்கும்
முயற்சிகள் அனைத்தும் பழிக்கும் காலகட்டமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நிறைய பயணம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இடமாற்றம், வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண் தெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். பெண்களினால் ஆதாயம் வருவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல காலகட்டமாக இருக்கும். பெண் குழந்தைகல் நிறைய நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது.
கவனம் தேவை
சனி வக்கிரமாகி 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏழரை நடந்து கொண்டிருப்பதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. அமைதியைக் கடைப்பிடிப்பது நன்மையை ஏற்படுத்தும். மனம் தடுமாறுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தாயுடன் பேசும் வார்த்தையில் கவனம் தேவை. சகோதரர்களிடம் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடன், வம்பு, வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பண வரவு அதிகரிக்கும்
வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 6 ஆம் வீட்டில் கேது அமர்வது குடும்பம் சார்ந்த விஷயங்களில் தடைகளைக் கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் புதன் வீட்டுக்கு வரும்போது வருமானம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆடி மாதத்தில் அனைத்து விஷயங்களிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
கவனம்
20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வித்தியாசமான அனுபங்கள் கிடைக்கும். எதிர்பாலினத்தவரிடம் ஈர்ப்பு, ஆன்லைன் பண மோசடி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. வேறு வேலை கிடைத்தால் மட்டும் வேலையை விட வேண்டும். 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. வீட்டில் இழப்பு, ஆரோக்கியத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. எந்தவொரு விஷயத்தையும் பெரிதாக யோசிக்காமல் செயலில் கவனமும், நிதானமும் கடைப்பிடித்தால் நல்லது.
வழிபாடு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு மிகச்சிறந்த ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும். பிள்ளையார்பட்டி விநாயகரின் படத்திற்கு தினந்தோறும் காலை ஒருமுறை அகல்விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகச்சிறந்த ராஜயோகத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications