Rasi Palan This Week: மீன ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் மாற்றம்.. பிள்ளைகள் விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் என்று அனைத்து விஷயத்திலும் அக்கறை செலுத்துவது, உதவுவது நன்மையைத் தரும். மரண பயம் நீங்கும். தாய் வழி, தந்தை வழி உறவு அனுகூலத்தைப் பெற்றுத் தரும்.
ஏற்றம்
உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவதற்கான யோகம் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். பிள்ளைகள் விஷயத்தில் அநாவசியமான செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. மரண பயங்கள் நீங்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது.
மன அழுத்தம் நீங்கும்
மன அழுத்தம் தீரக்கூடிய காலகட்டமாக இருக்கும். சுபகாரியத் தடைகள் நிவர்த்தியாகும். இடமாற்றம், தொழில் மாற்றம், ஆன்மீகம் தொடர்பான மாற்றங்கள் உண்டாகும். சித்தர்கள் ஆசிர்வாதம், குருமார்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். கோயில் கட்டுவது, நிலம் வாங்கிக் கொடுப்பது போன்ற யோகங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழிலில் நல்ல அற்புதமும், சந்தோஷமும் ஏற்படும்.
மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். எடுத்த காரியங்களில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். இதுவரை தடைபட்ட அனைத்து விஷயங்களும் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்
வழிபாடு
சளி, தலைவலி, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. காளி, சூளி, துர்க்கை வழிபடு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59 ஆவது பாடல், 75 ஆவது பாடலை படிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications