Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு பிப்ரவரியில் மெகா ஜாக்பாட் .. 2 மாற்றங்கள் நிச்சயம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
திருக்கணிதப்படி சனி பகவான் மீனம் ராசியிலேயே அமைந்துள்ளார். ராசி அதிபதி 4 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். 11 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் அமைந்துள்ளன. புதிய வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரங்கள் கிடைக்கும். தொழிலுக்கு புதிய கடன்கள் கிடைக்கும். கிரகங்களின் துணை உள்ளது. அதனால் கவலை வேண்டாம்.
அந்தஸ்து
உத்யோகம், வீடு, தொழில் ஆகியவற்றில் இட மாற்றங்கள் இருக்கும். வெளி மாநிலம், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. பூர்விக சொத்துகள் தேடி வரும். வீடு, நிலம் உள்ளிட்ட புதிய சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவத்துறையில் இருப்போருக்கு முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள விவிஐபிகளின் தொடர்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
கவனம்
நண்பர்களிடம், தொழில் கூட்டாளிகளுடன் பிரிவு உருவாகும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படும். வண்டி வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிதாக யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.
பரிகாரம்
கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். கழிவுப் பாதை, கால் மூட்டு, நரம்பு ஆகியவற்றில் பிரச்சனைகளில் கவனம் தேவை. சோம்பேறித்தனத்தை தவிர்த்து விடுங்கள். சுய தொழில் செய்வோருக்கு பிரச்சனைகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது. வாழைப்பூ, வாழைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதால் நன்மை ஏற்படும். முருகன் வழிபாடு எல்லா பிரச்சனைகளில் இருந்தும் தீர்வை கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications