Rasi Palan This Week: மேஷ ராசியைத் தேடி வரும் அதிர்ஷ்டம்.. பழிச்சொல்லுக்கு ஆளாகும் காலம் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே மற்றவர்கள் குடும்பத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. அதேபோல, பிறர் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த விஷயத்தில் அனுகூலம் காணப்படும். உறவினர்கள் தேவையில்லாத விஷயங்களை உங்கள் மேல் சொல் சொல்வார்கள். கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் போட்டுக் கொள்வது நல்லது.
குட் நியூஸ்
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். வேற்று மொழி மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பயணங்கள் சமயத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
தொண்டை, வாய், பற்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். நல்லெண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது நன்மையை ஏற்படுத்தும். பெண் தெய்வ வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications