Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. ராஜா மாதிரி வாழப் போறீங்க
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு கடன் அமைப்பு தீரும். மனதில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். ஆவணி மாதத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அசிடிட்டி போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
அனுகூலம்
ஏற்கனவே லிவர், கிட்னி செயல்பாடுகளில் பிரச்சனை இருப்பவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். அசையும், அசையா பொருள்களை வாங்கும் யோகம் உண்டு. வண்டி, வாகனத்தில் அனுகூலம் காணப்படும்.
நல்ல செய்தி வரும்
இதுவரை ஏதாவது ஒரு தடையை சந்தித்து வந்திருப்பீர்கள். அதுபோன்ற இழுபறியான நிலைமைகள் அனைத்தும் மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் அற்புதமான மாற்றங்களைப் பெறுவீர்கள்.
தடைகள் நீங்கும்
புதிய பொறுப்புகள் வரும். ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். மனதில் பெரிய நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும் அருமையான காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கு கூடும். கூட்டுத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழிலை தொடங்குவீர்கள்.
ஏற்றம்
சுப காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். லாபம், முதலீடு, பணவரவு போன்ற அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஏற்றங்கள் உண்டாகும். தொழிலில் பெரியளவு நிம்மதி ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
வழிபாடு
முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆவணி முடிந்து புரட்டாசி தொடங்குவதற்குள் பெருமாளை தரிசனம் செய்து கொள்வது நன்மை பயக்கும்
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications