Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு 3 கிரகங்களால் வரப்போகும் அதிர்ஷ்டம்.. பண வரவு கொட்டப் போகுது
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்கு அதிபதியான புதன் ராகுவோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். இந்த மாதம் செவ்வாய் பகவானும் 21 ஆம் தேதி கும்பத்தில் வந்து அமர்ந்துவிடுகிறார். இது மிகப்பெரிய நன்மையைத் தரக்கூடிய அமைப்பாகும். இந்த மாதம் சில தீமைகளும், ஏராளமான நன்மைகளும் கொண்ட அமைப்பாக இருக்கும். மிதுன ராசியினர் இந்த மாதம் வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நன்றாக வண்டி ஓட்டத் தெரிந்தாலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
கருத்த வேறுபாடு
சகோதர காரகன் செவ்வாய், சகோதரியை குறிக்கக் கூடிய சுக்கிரன் ஆகியோர் அஷ்டமத்தில் அமர்ந்திருக்கிறது. 3 ஆம் இடத்தில் கேது அமர்ந்துள்ளது. இளைய சகோதரன், சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடன் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு வரும் சூழல் உள்ளது. சொத்துகள் விஷயத்தில் யாருக்கும் எந்தவித உறுதியும், ஜாமீன் கையெழுத்தும் போடாமல் இருப்பது நல்லது.
திட்டமிடல்
பாக்கிய ஸ்தானத்தில் ராசியதிபதி அமர்கிறார். தொழிலில் நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்படும். திட்டமிட்டு பெரிய பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலில் நிறைய விஐபிக்கள் தொடர்பு ஏற்படும். நீங்கள் வேலை செய்யும் துறையில் பெயர், புகழ் ஏற்படும். குரு பகவான் ராசியில் இருப்பதால் உங்களுடைய வேலை அழுத்தத்தை அதிகரிப்பார். வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்கும்.
வேலைப்பளு
வேலையில் பளு ஏற்பட்டாலும் அதனைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. படிக்கும் மாணவர்களுக்கு புதன், ராகு, செவ்வாய் சேர்க்கை உண்டாவதால் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் படிப்பவர்களுக்கு படிக்க முடியுமா என்பது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதனை கண்டுகொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்ல வெற்றிகளைக் கொடுக்கும்.
முருகர் வழிபாடு
10 இல் இருக்கும் சனி பகவான் வேலைவாய்ப்பில் பிரச்சனை, நெருக்கடியை கொடுத்தாலும் குரு பகவான் 2 ஆம் இடத்துக்கு வரும்போது எல்லா விஷயங்களும் சரியாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உங்களுக்கு அனுகூலத்தைத் தரும். சண்முக கவசத்தை தினந்தோறும் படிப்பது, கேட்பது உங்களுக்கு ஏற்றத்தை தரும்.
பிப்ரவரி மாதம் 8 ஆவது ஸ்தானத்தில் இருக்கும் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உங்களுக்கு நல்ல வருமானம், பணவரவைக் கொடுக்கும். உங்களுடைய சுய பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். நெல்லை குறுக்குத்துறை முருகனை வழிபாடு செய்வது நற்பலன்களை அள்ளித் தரும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications