Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இந்த வாரத்தில் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம், படிப்பு, வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றங்கள், அனுகூலம் காணப்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் நல்ல அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள், கணவன், மனைவி, பெற்றோர் விஷயத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பெற்றோர், பெரியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு, மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் காலகட்டம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. வாக்குவாதமே இல்லாமல் இணக்கமாக விலகிச் சென்றுவிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.
கவனம்
விரையத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தேவையில்லாத மனஉளைச்சல், டென்சன், கோபம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சுக ஸ்தானங்கள், சொத்துகள், வீடு, பண்ணை, காளை மாடு, அரசாங்க சொத்துகள், சக ஊழியர்கள் போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெற்றோரின் உடல்நிலையிலும் மிகுந்த கவனம் தேவை.
வழிபாடு
சளி தொந்தரவு, தொண்டை உபாதைகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் பழுதுகள் வருவத்கான வாய்ப்புள்ளது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முருகர் வழிபாடு உங்களுக்கு நல்ல மேன்மையை ஏற்படுத்தும்.
-
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications