அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படாதீங்க... அவமானப்படுத்துவார் சனிபகவான்

சனிபகவானின் தீய பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவார்கள். சனிபகவான் யாரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி தண்டனை தருவார் என்று பார்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுத்தம் இல்லாத குப்பைகள் நிறைந்த இடம் சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். தலைக்கனம் கொண்டவர்கள், அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவர்களை பிடித்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி விடுவார் சனிபகவான்.

நவ கிரகங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் தங்கியிருந்து நல்லதும் கெட்டதுமாக பலன்களை கொடுப்பார் சனிபகவான்.

சனி பெயர்ச்சியை எல்லோரும் ஒருவித அச்சத்தோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். சனியின் பார்வை படும் இடம் பாழ் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் நல்ல மனம் படைத்தவர்கள், உதவி செய்யும் குணம் கொண்டவர்களை சனிபகவான் தண்டிக்க மாட்டார்.

ஈரம் ரொம்ப பிடிக்கும்

ஈரம் ரொம்ப பிடிக்கும்

உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான்க்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

அசுத்தமான இடங்கள்

அசுத்தமான இடங்கள்

குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும். அவர்களை பிடித்துக்கொள்வார்.

அழுகுரல் சனிக்கு பிடிக்கும்

அழுகுரல் சனிக்கு பிடிக்கும்

சுத்தம் இல்லாத குப்பைகள் நிறைந்த இடம் சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்கள் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

சனி கொடுக்கும் தண்டனை

சனி கொடுக்கும் தண்டனை

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும். மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே.

காலம் பார்த்து தண்டிப்பார் சனி

காலம் பார்த்து தண்டிப்பார் சனி

தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார். பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனி பகவானுக்கு பிடிக்கும்.

சனியின் நேசம்

சனியின் நேசம்

நமச்சிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு செய்பவர்களை சனி பிடிப்பதில்லை. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி பகவான் நேசிப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை.

பித்ரு கடன்

பித்ரு கடன்

ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமான ஒன்று. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் கொண்டு இறைவனை பூஜிப்பவர்களை சனி எதுவும் செய்யமாட்டார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. காகத்திற்கு எள் கலந்த வைத்து எந்நாளும் துதிப்பவரை சனி பகவான் நெருங்குவதே இல்லை. வலம்புரி சங்குள்ள வீடு சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் படுத்துவதில்லை.

சுத்தம் அவசியம்

சுத்தம் அவசியம்

சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார் சனிபகவான். சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் அன்னை மகாலட்சுமி. அந்த இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி பகவான். எனவே உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+