நவராத்திரி நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நினைத்தது நிறைவேறும்
நவராத்திரி நாட்களில் அம்பிகையின் 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். இந்த நாமங்களை தினசரி உச்சரித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று பலரும் அனுபவ பூர்வமாக உண
சென்னை: பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். நவராத்திரி பண்டிகை பெண் தெய்வங்களுக்காக வீட்டில் வசிக்கும் பெண் தெய்வங்கள் எடுக்கும் பிரம்மோற்சவம். கொலு வைத்து அம்பிகையை கொண்டாட்டமாக வணங்குவார்கள். பாடல்கள் பாடியும் நைவேத்தியங்களை படைத்தும், அலங்கார ரூபிணியாக அம்பிகையை வழிபடுவார்கள். இந்த நாட்களில் நாம் சொல்லும் மந்திரங்கள் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும்.
அப்படி என்ன அந்த மந்திரத்தில் அற்புதங்கள் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? நவராத்திரி நாளில் நாம் லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அனைவராலும் இப்படி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்க முடியாது. அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு.
இந்த நாமாவளியை காலையிலும், மாலையிலும் பதினோறு முறை மனதார ஜெபம் செய்யுங்கள் மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது உச்சரிக்க வேண்டும். ஒருவித தியானம் போல செய்ய வேண்டும்.
இந்த மந்திர உச்சரிப்பானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான எண்ணங்கள் நிறைவேற அன்னை லலிதாம்பிகை அருள் பாலிப்பாள்.
இந்த மந்திரங்களை மனதில் உரு போடுங்கள் உரு ஏற திரு ஏறும் என்பது முன்னோர்கள் வாக்கு. நலம் அனைத்தும் தந்தருளும் நவராத்திரி நாட்களில் குடும்பமாக வீட்டுக்கு வருவோரை வரவேற்பதும் உபசரிப்பதும் ரொம்ப முக்கியம். வீட்டுக்கு வருபவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள். அவர்களின் ஆசியுடன் அம்பாளின் அனுக்கிரஹமும் கிரகத்தில் சேர, எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications