Puthandu Palan: ஜாவா சுந்தரேஷனாக மாறும் கும்ப ராசி.. பண மழை கொட்டப் போகுது
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கும்பம் புத்தாண்டு பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் வரை 5 இல் இருக்கும் குரு எல்லா விதமான நன்மைகளையும் கொடுக்கப் போகிறார். ஜூன் மாதத்திற்குப் பிறகு 6 ஆம் இடத்துக்கு வருவதால் முதுகுதண்டுவடம், அடிவயிறு, கழிவுகள், முகத்தில் உள்ள உறுப்புகள் விஷயத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் எந்தவித கோபதாபமும் இல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில் ரீதியாக செட்டிலாகும் யோகம் உண்டாகும்.
படிப்பில் ஏற்றம்
படிக்கக்கூடிய மாணவர்கள் அரியர்ஸ்களை எல்லாம் முடித்து, சூப்பரான ஒரு வேலையில் அமரும் யோகம் ஏற்படும். வேலை, உத்தியோகம், வியாபாரம், தொழில் எதுவுமே சரிப்பட்டு வரவில்லை என்பவர்களுக்கு இனி எல்லாமே கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராகு இருப்பதால் மன அழுத்தம் ஏற்படும். கேது 7 இல் இருப்பதால் குடும்பத்தில் அந்நியர் தலையீடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
தலையீட்டை தவிர்ப்பது நல்லது
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். உறவினர்களால் தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 2 ஆம் இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் ஆயில் புல்லிங் செய்வது நன்மை பயக்கும். உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
சந்தோஷம்
வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பது நன்மையைத் தரும். பழைய எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. எதிரிகள் பலமாக இருக்கும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் அவர்களிடம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுருங்கிக் கொள்வது நல்லது. கண்டிப்பாக கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபார நஷ்டம் என ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலைமை தலைகீழாக மாறும்.
குரு பார்வை
ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை இருப்பதால் ஏற்றங்கள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஏப்ரல் 14க்கு மேல் போடுவது நல்லது. கும்பம் இருக்கும் வீட்டில் ஏற்றம் உண்டாகும். புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் வருவது, குழந்தைகளுக்கு நல்லது நடப்பது, பிள்ளைகள் வெளிநாடு செல்வது, ரத்த பந்த உறவுகளுக்கு ஏற்படுவது, துணை விஷயத்தில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்குவது என எல்லாமே நேர்மறையாக இருக்கும்.
வழிபாடு
வலுக்கலான இடங்கள், படிக்கட்டு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்கள், கழுத்து வலி, தோல் வலி போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் வழிபாடு, உக்கிர தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும். நரசிம்மர் கவசம், விநாயகர் கவசம், அனுமன் கவசம் ஆகியவற்றை கேட்பது படிப்பது நன்மை பயக்கும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications