புத்தாண்டு ராசி பலன் 2026: சிம்ம ராசிக்கு கடனுக்கு குட்-பை.. அடிக்க போகுது ஜாக்பாட்
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு எதிர்வருகிற 2026 ஆம் வருடம் அமோகமாக இருக்கும். தாய், தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிரிகள் பலவீனம் அடைவார்கள். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். முதலீடுகளில் லாபம் சிறப்பாக இருக்கும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி குவியும். மந்தம், சோர்வு நீங்கி மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். கடன் சுமை வெகுவாக குறையும். பழைய பாக்கி வசூலாகும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். வாழ்க்கை துணையுடன் இருந்த மன சஞ்சலங்கள் நீங்கி அந்யோநியம் அதிகரிக்கும். காதல் அமைப்பில் இனிமை கூடும்.
முன்னேற்றம்
வாகனங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பயணங்களால் ஆதாயம் உண்டு. கல்வி, உத்யோகம், தொழில் எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் தடைபட்ட பதவி உயர்வு நிச்சயம் உண்டு. தொழில் விருத்தி செய்வதற்கான சூழல் இருக்கிறது.
கவனம்
கழுத்து வலி, ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரயம் இருக்கும். திங்கள் கிழமை தோறும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தி, எலுமிச்சையில் செய்யும் உணவு பொருட்களை தானம் செய்வதால் பிரச்சனைகள் குறைந்து யோக பலன்கள் கிடைக்கும். பிள்ளையார் பட்டி சென்று அபிஷேகம் செய்வது காரிய தடைகள் நிவர்த்தியாக்கும்.












Click it and Unblock the Notifications