Puthandu Palan:விருச்சிக ராசிக்கு புத்தாண்டில் கொட்டும் அதிர்ஷ்டம்..வாகனத்தில் காத்திருக்கும் ஆபத்து
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
விருச்சிகம் புத்தாண்டு பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோக பலம் அதிகளவில் கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. ரத்தபந்த உறவுகள, தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும்.
பதட்டம் வரும்
தேவையில்லாத பதட்டம் ஏற்படும். இருதயப் பிரச்சனை இருக்குமோ, வேறு ஏதேனும் இருக்குமோ என்கிற பயம் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிரிகள் விஷயத்தில், வண்டி, வாகனத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்குவது நல்லது.
வாகனத்தில் கவனம்
சிறிய வயது பசங்கள், வண்டி வாகனம் ஓட்டும் ஆண்கள், பெண்கள் மிகுந்த கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பலம் ஏற்படும். வாழ்க்கையில் நம்பிக்கை உண்டாகும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி ஏற்படும்.
தடை நீங்கும்
திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணமாகி இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புத்திர சந்தான நிவர்த்தியாகும். குரு பார்வை வருவதால் இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடல் கடந்து இருப்பவர்கள் தாய் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அமைப்பு ஏற்படும். வேற்று மொழி மதத்தினரிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது.
வழிபாடு
குலதெய்வ வழிபாடு, முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ரத்தத்தில் பரவும் நோய், தொற்றுநோய், கொழுப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்கலை படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பிள்ளையார்பட்டியில் விநாயகரை வழிபட்டு வருவது அற்புதமான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications