Puthandu palan 2026: புத்தாண்டில் 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Puthandu palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் தொட்டது துலங்கும் யோகம், எடுத்த காரியங்களில் ஜெயம் பெறும் 3 ராசியினர் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் (Viruchigam new year rasi palan):
விருச்சிக ராசிக்காரர்களே இந்த ஆண்டு முழுவதும் பிரகாசமாக இருப்பீர்கள். மனதில் ஒரு தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் முதலிடத்தைப் பிடித்துக் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம், புரிதல் ஏற்படும். ராசிநாதன் செவ்வாய் குரு பகாவனின் பார்வையை பெற்றிருப்பதால் தெளிவான முடிவை எடுப்பீர்கள்.
ஆளுமைத் தன்மை, நிர்வாகத் திறமை அதிகரிக்கும். எங்கே சென்றாலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். 8 ஆம் இடத்தில் குரு பகவான் மறைந்திருப்பதால் மே மாதம் வரை செலவுகள் ஏற்படும். பணம் கொடுத்து ஏமாறும் சூழ்நிலை ஏற்படும். எதுவுமே சரியாக நடக்கவில்லையே என்கிற எண்ணம் ஏற்படும். ஆனாலும், ஜூன் மாதம் முதல் ராசிக்கு 9 வது வீட்டில் குரு பகவான் வந்து அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் ஜூன் மாதம் முதல் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
ஏமாந்து போன தொகை கைக்கு வரும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எல்லாமே சிறப்பாக இருக்கும். ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை அருமையாக இருக்கும். பிள்ளைகளின் திருமணங்கள் கைகூடி வரும். அக்டோபர் 14 முதல் டிசம்பர் மாதம் வரை குரு பகவான் ராசிக்கு 10 ஆம் வீட்டிற்கு போவதால் உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலையில் இடமாற்றம், சிறு சிறு தொந்தரவுகள் வரும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உத்தியோகம் நன்றாக இருக்கும்.
கடகம் (Kadagam new year rasi palan):
கடக ராசிக்காரர்களே எல்லா விஷயங்களிலும் நீங்கள் ஜெயித்துக் காமிக்கும் யோகம் உண்டாகும். பண வரவு, செல்வாக்கு, புதிய பதவி என இந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருப்பீர்கள். கடந்த ஆண்டுகளில் கை நழுவிப் போன சில வாய்ப்புகள் இந்த ஆண்டு நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். எங்கு சென்றாலும் மரியாதை உங்களுக்கு கூடிக்கொண்டே இருக்கும்.
பார்த்தும் பார்க்காமல் சென்றவர்கள் கூட உங்களிடம் வந்து மதித்துப் பேசும் நிலை ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கெளரவம் உயரும். 9 ஆம் இடத்தில் சனி பகவான் தொடர்ந்து இருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அவசரமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமித்துக் கொள்வது நல்லது.
குரு பகவான் மே மாதம் வரை உங்கள் ராசிக்கு 12 ஆவது இடத்தில் இருப்பதால் சுபச் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளியூர் பயணங்கள் உண்டாகும். குரு பகவான் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ராசிக்குள் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
திடீர் பண வரவுகள் எதிர்பார்க்கலாம். பெரிய பதவிகள், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அது உங்களுக்கு அவ்வளவு நன்மையை ஏற்படுத்தாது என்பதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் 8 ஆவது வீட்டில் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை மறைவதால் பணம் கொடுப்பது, ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
மீனம் (Meenam new year rasi palan):
மீனம் ராசிக்காரர்களே தைரிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரமாக முடியும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை அதிகமாகிக் கொண்டே போகும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று திணறுவீர்கள். கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காக கடன் வாங்கி செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
கடனை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு சாதகமாக சுக்கிரன், செவ்வாய் இருக்கும்போது இந்த வருடம் பிறந்துள்ளதால் எல்லா வகையிலும் வெற்றி ஏற்படும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். போட்டிகளில் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். தேர்தல், விவாதங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்புள்ளது.
4 ஆம் இடத்தில் மே மாதம் வரை குரு பகவான் அமர்ந்திருப்பதால் அம்மாவிற்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவுகள் ஏற்படும். வீடு, வாகன செலவுகள் அதிகரிக்கும். அதனால் மே மாதம் வரை கவனமாக இருப்பது நல்லது. ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் 14 ஆம் தேதி வரை 5 ஆம் இடத்தில் குரு பகவான்
பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும் வாய்ப்பு ஏற்படும். அக்டோபர் 24 முதல் டிசம்பர் மாதம் வரை குரு பகவான் 6 ஆம் வீட்டில் மறைவதால் அந்த காலகட்டத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் பழி, வதந்திகள், விமர்சனங்கள் உங்கள் மேல் வரும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வீடு மனை வாங்குவது, விற்பனை செய்வது லாபகரமானதாக இருக்கும். வியாபாரம் புதிதாக தொடங்கும் வாய்ப்புள்ளது. ராகு கேது பெயர்ச்சி நன்றாக இருக்கும். ராகு கேது இப்போது இருக்கும் இடமும் நல்லது.












Click it and Unblock the Notifications