Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2021: இந்த 6 ராசிக்காரர்களில் யார் அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா?

நவ கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றன. மந்தமடைந்த பொருளாதார நிலை மீண்டு எழும், மக்களிடைய பணப்புழக்கம் அதிகரிக்கும். இழந்த வேலையை திரும்ப பெறுவீர்கள். இந்த ஆண்டு எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021ஆம் ஆண்டு பிறந்துள்ளது. கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டிருப்போம். பிறக்கப்போகும் புத்தாண்டில் கவலைகள் மறந்து கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்க அனைவரையும் ஒன் இந்தியா இணைய தளம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம். இந்த புத்தாண்டில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், யாருக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றன. மந்தமடைந்த பொருளாதார நிலை மீண்டு எழும், மக்களிடைய பணப்புழக்கம் அதிகரிக்கும். இழந்த வேலையை திரும்ப பெறுவீர்கள். 2021ஆம் ஆண்டு கூட்டு எண் 5 புதனின் ஆதிக்கத்தில் பிறக்கிறது. எதையும் எதிர்கொள்ள தயாராகி விடுவீர்கள். சந்திரன் கடகம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் தருணத்தில் புத்தாண்டு பிறக்கிறது. 2021ஆம் ஆண்டு நன்றாக இருக்கும். சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சூரியன் புதன் இணைந்திருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது.

Recommended Video

    Mandous Cyclone | மாண்டஸ் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல் | *Tamilnadu

    பெண்கள் மிகப்பெரிய சாதனைகளை செய்வார்கள். பெரிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். குருவும் சனியும் 2021ஆம் ஆண்டு பிறக்கும் போது இணைந்திருப்பதால் பொருளாதார மந்தம் ஏற்படும். தொழிலதிபர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பேராசியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பாதிப்பு வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் மத்தியில் சுறுசுறுப்பு ஏற்படும். இந்த புத்தாண்டில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷம்

    மேஷம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காவது ராசியான கடக ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. நான்காம் வீட்டில் நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறக்கும் போது உங்க ராசியில் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். பத்தாம் வீட்டில் பத்தாம் வீடு அதிபதி சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்க கூடவே குரு இணைந்திருக்கிறார். இந்த ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி வரை குரு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதுவரைக்கும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை ஏற்படும். வேலையில் கவனம் செலுத்த வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதிக்கு மேல் மன கலக்கங்கள் நீங்கும். குருபகவான் அதிசாரமாக 11ஆம் வீட்டிற்கு நகரும் போது உங்களின் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெரிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்கலாம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த சிக்கல் நீங்கும். வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் வண்டி வாகனங்களில் கவனம் தேவை. டிசம்பர் மாதத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த ஆண்டு உங்களுக்கு திருமணம் கை கூடி வரும் சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. செவ்வாய்கிழமை விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    இந்த ஆண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தோல் நோய்கள் வரலாம் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாகி குரு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் கவனம் தேவை. பணம் விசயங்களில் கவனம் தேவை. கவனமும் விழிப்புணர்வும் தேவை. சில நேரங்களில் நிம்மதி இல்லையே என்று கவலைப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் சில பிரச்சினைகள் வரலாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் வரை கவனம் தேவை. குடும்ப ஒற்றுமையில் சந்தோஷம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். 2021ஆம் ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு திருச்சி தாயுமான சுவாமிகளையும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்யவும். ஸ்ரீரங்கநாதரை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

    மிதுனம்

    மிதுனம்

    புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த ஆண்டு துவக்கத்திலேயே உங்க தனாதிபதி சந்திரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை கூடும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுவீர்கள். சுக்கிரன் ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர் பிரிவுகள் வரும். குழந்தைகளுக்கு உயர்கல்விக்காக சில செலவுகள் வரும். ராசிநாதன் புதன் வலிமையாக இருப்பதால் முன்னேற்றம் அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் குரு அதிசாரமாக செல்லும் போது நல்ல விசயங்கள் நிறைய நடைபெறும். வீடு கட்டலாம், திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகளை குருவின் பார்வை குறைத்து விடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பாடங்களில் கவனம் செலுத்துங்கள். 2021ஆம் ஆண்டு நிம்மதி சந்தோஷத்தை கொடுக்கும். வண்டி வாகனங்களை பார்த்து பயன்படுத்தவும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகம்புல் மாலை சாற்றி விநாயகப்பெருமானை வணங்கவும் நல்லதே நடக்கும்.

    கடகம்

    கடகம்

    உங்க ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். கண்டகச்சனி இருப்பதால் எந்த காரியம் செய்யும் முன்பாக யோசித்து செய்யவும். பண முதலீடுகளில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் கவனம் தேவை. திருமணம் சுப காரியங்கள் நடைபெறும். சொத்து சேர்க்கை ஏற்படும். வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் எதையும் பேச வேண்டாம். பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். வருடத்தின் பிற்பகுதியில் சொத்து சேர்க்கை ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு, நிம்மதி கிடைக்கும். உறவினர்களிடம் தேவை. கூட்டுத்தொழில் வேண்டாம். இந்த ஆண்டு திடீர் யோகம் வரும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். தோல் நோய்கள் வரலாம் உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
    பிரதோஷ நாளில் நந்தியை வணங்கவும். பாலபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கவும். நல்லதே நடக்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    சூரியனை ராசி அதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு நீங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தப்போகிறீர்கள். யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய சுப விரையங்களை செய்வீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு கட்ட ஆரம்பிக்கலாம். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் முன்பாகவும் வீட்டில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவும். வருடம் பிறக்கும் போது ஆறாம் வீட்டில் சனியோடு இணைந்திருக்கும் குரு பகவான் ஏப்ரல் மாதம் அதிசாரமாக உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு செல்கிறார். நிறைய நன்மைகள் நடைபெறும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு படிப்பிற்காக செலவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கலாம் வெற்றிகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனிபகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினையில் இருந்த சிக்கல்கள் நீங்கும் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு நிம்மதி ஏற்படும். பெண்களுக்கு வேலையில் திறமை பளிச்சிடும். உயரதிகாரிகளிடம் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். வியாபாரம் நன்றாக இருக்கும். வெளிநாடு முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அரியர் வைத்திருந்தவர்கள் இந்த ஆண்டு கிளியர் செய்து விடுவீர்கள். ஞாயிறுக்கிழமை பிரதோஷ நேரத்தில் யோக நரசிம்மரை நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

    கன்னி

    கன்னி

    கன்னி ராசிக்காரர்களே... 2021 ஆண்டு சவால்களை சாதனைகளாக மாற்றக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. பொறுமையை கடைபிடித்தால் நீங்கள் இந்த ஆண்டு நிறைய சாதிக்கலாம். ஆண்டின் துவக்கத்தில் வாகன போக்குவரத்தில் கவனமாக இருப்பது அவசியம். குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளால் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். குருபகவான் அதிசாரமாக சென்று ஆறாவது வீட்டில் மறையும் காலத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை கவனமாக இருப்பது நல்லது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் சுப காரியம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பாசம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். இந்த ஆண்டு திடீர் பண வரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இறங்க வேண்டாம் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இடமாற்றம் நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு 2021ஆம் ஆண்டு நன்மைகள் அதிகம் நடைபெறக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+