கோபக்காரர்கள்..மூளைக்காரர்கள்..மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் எப்படிப் பட்டவர்கள்?
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் உள்ள குணநலன்களைப் பார்க்கலாம். நவகிரகங்களின் நல்லாசி இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்றும் தெரிந்து கொள்வோம்.
சென்னை: ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ராசிகளின் தன்மைக்கு ஏற்ப குண நலன்களும் மாறுபடுகின்றன. 12 ராசிகளுக்கு 27 நட்சத்திரங்கள் உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிக்கட்டங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு இல்லை.
வேத ஜோதிடத்தில் 12 ராசிகளையும் நீர், நெருப்பு, நிலம், காற்று என நான்கு வகையாக உள்ளன. சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி எனவும் ராசியினை பிரித்து வைத்துள்ளனர்.

மேஷம்
வீரத்தின் நாயகன் செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கவர்கள். எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பவர்கள். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள். மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும் என்றாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் மேஷ ராசிக்காரர்கள்தான்.

ரிஷபம்
காதல் கிரகம் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. நீங்கள் அழகான தோற்றத்தைக் கொண்டவர்கள். அமைதியானவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். இவர்களின் நட்பு வட்டம் பெரியதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.

மிதுனம்
அறிவின் நாயகன் புதனை அதிபதியாகக் கொண்டவர்களே... இந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். உடல் பலத்தை காட்டிலும் உங்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். நீங்கள் புத்திசாலிகள் உங்களின் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் நீங்கள் உங்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை. அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள்.

கடகம்
மனோகாரகன் சந்திரனை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்களே... பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வாழ்வில் மிக வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவீர்கள். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக கலங்கவே மாட்டீர்கள். வைராக்கிய மனம் பெற்ற நீங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும்.

சிம்மம்
சூரியனை ஆட்சிநாயகனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்தால் அதிகம் சாதித்து காட்டுவீர்கள். கொடுத்து உதவும் தன்மை கொண்ட நீங்கள் கோபப்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் உங்களுக்கு போராட்டம் தான். நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள்.

கன்னி
புதனை ராசி நாயகனாகக் கொண்ட நீங்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பேசுவதில் ஆற்றல் பெற்றவர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். திருமணம் முடிக்கும் போது கவனமாகப் இருப்பது அவசியம். உங்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் உங்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது.

துலாம்
சுக்கிரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட நீங்கள், மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் உங்களைப் போல நல்லவர்கள் யாரும் இல்லை. கைராசிக்காரர்கள் நீங்கள் என்பதால் உங்களை எல்லாவற்றிர்கும் கூப்பிடுவார்கள். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள்.

விருச்சிகம்
துணிச்சல்காரன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். எந்த செயலையும் ஆர்வத்தோடு கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்கள் நீங்கள். தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள்.

தனுசு
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் தெய்வ பக்தியோடு தேச பக்தியும் கொண்டவர்கள். வீரமும், விவேகமும் கொண்டவர்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். கவரிமான் பரம்பரை என்று தான் உங்களைச் சொல்ல வேண்டும்.

மகரம்
சனிபகவனை ராசி நாதனாகக் கொண்ட நீங்க புன்னகை சிந்தும் முகத்தோடும் போற்றும் இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் நீங்கள் வைராக்கிய மனம் கொண்டவர்கள். பொறுமைசாலிகளாக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை பெற முடியும். தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும். தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.

கும்பம்
சனியின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பீர்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வீர்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டீர்கள். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள்.

மீனம்
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பீர்கள். தானம் செய்வதில் ஆர்வம் கொண்ட நீங்கள், நிதானம் பெற்றிருந்தால் பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். மனதிற்கு எது சரியொன்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. எந்த நிலையிலும் எல்லோரையும் மதிப்பீர்கள். எவ்வளவு பெரிய பதவி என்றாலும் தானே தேடிவரும் அதுதான் உங்களின் தனித்தன்மை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications