பொருளாதாரம் டூ குடும்பம்! அடுத்த 1 வருடம்.. மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? 2025 புத்தாண்டு ராசி பலன்
சென்னை: 2025ம் புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லை. ஒரு வருடம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. 12 மாதங்களில் ஒருவரின் வாழ்க்கை மேலே போகும்.. கீழேயும் போகும். 12 மாதங்களில் ஒருவரின் வாழ்க்கை தலைகீழாக கூட மாறும்.
அந்த வகையில் 2025ம் ஆண்டு முழுக்க.. மேஷ ராசியினர் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நடக்கும்.. அவர்களுக்கு இதில் ஏற்றம் ஏற்படும். எதிர் சறுக்கல் ஏற்படும் என்று இங்கே பார்த்து விடலாம்.

ஏற்றம் ஏற்படும் விஷயங்கள்:
1. வீடு வாங்கலாம்: இந்த 2025ம் வருடம் உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் உள்ளது. சொந்தமாக ஒரு வீட்டில் இல்லாமல் இத்தனை காலம் கஷ்டப்பட்டீர்கள். முக்கியமாக வாடகை வீட்டில், ஒண்டி குடித்தனத்தில் இருந்து வந்தீர்கள். இனி அந்த கஷ்டம் இருக்காது. 2025ம் வருடம் வீடு கட்டும் யோகம் வந்துவிடும்.
2. நிலம் வாங்கலாம்: உங்கள் ஊரிலேயே நீங்கள் நிலம் பார்த்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். இத்தனை காலம் 10-15 லட்சம் ரூபாயில் நிலம் பார்த்தால்.. 40 - 45 லட்சம் ரூபாய் வரை கேட்டிருப்பார்கள். கவலை வேண்டாம் 2025 மார்ச் மாதத்திற்கு பின் அந்த நிலைமை இருக்காது. நிலம் வாங்கும் யோகம் அப்போது கைகூடும்.
3. கடன்களை அடைக்கலாம்: உங்களுக்கு இப்போது சில லட்சம் கடன் இருக்கலாம். திருமண கடன், வீட்டு கடன், தனியாக நீங்கள் எடுத்த லோன் ஆகியவை இருக்கலாம். அவை எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக.. ஒரே அடியாக இல்லாவிட்டாலும் அடைத்து விடுவீர்கள்.
4. வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும்: பணி உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக எதிர்பார்த்த ஆன்சைட் மாற்றங்கள், தேர்வு எழுதி உயர் பதவிக்கு செல்லும் வாய்ப்புகள் வரும்.
சறுக்கல் ஏற்படும் விஷயங்கள்:
1. திருமணத்தில் சறுக்கல்: திருமண விவகாரங்களில் அவசரப்பட வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். சிலருக்கு திருமண உறவில் மோதல்கள் ஏற்படலாம்.
2. ஆரோக்கியத்தில் சறுக்கல்: உங்கள் உடல் உபாதைகள் ஏற்படலாம். முக்கியமாக இதயம் சார்ந்த பிரச்சனைகள் வரும். அதோடு வயிற்று பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள் வரலாம்.
3. முதலீடுகள் வேண்டாம்: தினசரி முதலீடுகள், டிரேடிங் செய்ய வேண்டாம். நீண்ட கால முதலீடுகளை கவனமாக செய்யுங்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1. படிப்பில் கவனம் தேவை: படிப்பில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் சிலருக்கு தேர்வில், வகுப்பில் பிரச்சனைகள் வரலாம்.
2. மன அழுத்தத்தில் கவனம் தேவை: மன அழுத்தம் அதிகரிக்கலாம். முடிந்த அளவு மன அழுத்தம் தரும் விஷயங்களை தவிர்க்கவும்.
3. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள்: வாகன விபத்துகள் ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள்.
4. பயணங்களில் கவனம் தேவை: பேருந்து, ரயில் பயணங்களில் கவனம் தேவை. பணம் தொலைவது, பொருட்கள் தொலைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications