ஆடி அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வனத்துறை
விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இன்று முதல் ஆறு நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
ஆடி அமாவாசை திருவிழா இந்த ஆண்டு 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 30ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் கூட்டம் அலைமோதும்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை
இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வரும் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல கோவில்களில் ஆடி அமாவசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவாகக் கொண்டாடப்படும்.

ஆடி அமாவாசையில் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஆண்டு தோறும் ஒரு வார காலத்துக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பிரதோஷம் தொடங்கி, ஆடி அமாவாசை முடியும் வரை, நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு வார காலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பக்தர்கள் கோரிக்கை
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் அலைமோதும். கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் பலரால் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம், அல்லது சாமி தரிசனம் திருப்தியாக செய்ய முடியாமலும் போகலாம். எனவே, கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே, ஒரு வார காலத்திற்கு ஆடி அமாவாசை திருவிழாவை நீட்டிக்கக் கோரி, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

6 நாட்கள் மலையேர அனுமதி
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் வரும் 30ஆம் தேதிவரைக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆடி அமாவாசை சிறப்பு
ஜோதிட ரீதியாக, ஆடி அமாவசை அன்று, சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் ஆடி மாதம் முழுவதும் அமர்ந்திருக்கும் சூரியனோடு சந்திரனும் பெயர்ச்சியாகும். எனவே, ஆடி அமாவாசை சந்திரனின் பலமும் தாக்கமும் அதிகமாக இருக்கும். பித்ரு கடன் தீர்ப்பது முதல், விரதம் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவது வரை, ஆடி அமாவாசைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. சிவனின் அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் இணையும் போது, சிவன் ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications