ஆடிப்பூரம்... ரங்கநாதர் பரிசளித்த பட்டு வஸ்திரம்..தேரில் வலம் வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. ரங்கமன்னாருடன் தேரில் வலம் வந்து மக்களுக்கு அருள்புரியும் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.
108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஆண்டாள் ரங்கமன்னாருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடிப்பூர திருவிழாவின் ஐந்தாம் நாள் கருடசேவை நடைபெற்றது. கருட சேவையில் ஆண்டாள் ரங்கமன்னார் அன்ன வாகனத்திலும், ஐந்து பெருமாள்கள் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளினார். பின்னர் பெரிய பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், சுந்தரராஜ பெருமாள், ஆண்டாளுடன் ரங்கமனார் எழுந்தருளினர். இந்த விழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். ஆலயத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டாள் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் ரங்கமன்னார் நேற்று முதல்நாள் காட்சி அளித்தார். இந்த கோலத்தை தரிசனம் செய்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் என்பது ஐதீகம். சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்கள் ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆண்டாளையும் ரங்கமன்னாரையும் தரிசனம் செய்தனர்.

தேரில் வலம் வரும் ஆண்டாள்
ஆடிப்பூரம் தினத்தில் திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதால் இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கநாதர் வஸ்திர தானம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரை தேரோட்டநாளில் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டாளுக்கு பட்டுப்புடவை
பூவுலகில் துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த வஸ்திரங்கள் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருகிறார். தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேரோட்டம் கோலாகலம்
இன்றைய தினம் தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மான் ராஜ் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நகராட்சி நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகள், முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications