Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி வெள்ளியில் திருமண தடை நீக்கும் பௌர்ணமி யாகம் - வீடு கட்ட வாஸ்து ஹோமம்

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வாஸ்து தோஷம் நீங்கும் யாகமும், பௌர்ணமி யாகமும் நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி வெள்ளிக்கிழமையான 27ஆம் தேதியன்று பௌர்ணமியை முன்னிட்டு திருமண தடை நீக்கும் யாகமும், காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்து கொண்டிருக்கும் திருக்காட்சி இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப் பட்டுள்ளது.

வாஸ்து சாந்தி பரிகாரம்

வாஸ்து சாந்தி பரிகாரம்

வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.

மகா அபிஷேகம்

மகா அபிஷேகம்

இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம். ஆடி வெள்ளிக்கிழமையான 27ஆம் தேதியன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.

திருமண தடை நீங்கும் யாகம்

திருமண தடை நீங்கும் யாகம்

27.07.2018 பௌர்ணமி அன்று காலையில் 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆண் - பெண் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், தம்பதியருக்கு குழந்தை பாக்யம் வேண்டி நடைபெறும் சந்தான கோபால யாகங்களில் பங்கேற்று மாலை நேரத்தில் ராகு-கேதுவிற்கு நடைபெறும். அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவலிங்க ரூபமான 468 சித்தர்களை வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் மற்றும் ஆண், பெண் திருமணத்தடை நீங்குகிறது, குழந்தை பாக்யம் கிடைக்குகிறது என்கிறார்கள் ஹோம பூஜைகளில் பங்கேற்ற பக்தர்கள்.

ஸ்ரீவிநாயகர் தன்வந்திரி

ஸ்ரீவிநாயகர் தன்வந்திரி

வருகிற 28.07.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோணம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு நடைபெறும் சிறப்பு ஹோமத்திலும், தைலாபிஷேகத்திலும் பங்கேற்று ஸ்ரீ விநாயகர் தன்வந்திரியை வழிப்பட்டு தைல பிரசாதத்தை உட்கொண்டால் சர்க்கரை வியாதி, வலிப்பு நோய், மற்றும் உடல் சார்ந்த நோய்கள், மனம் சார்ந்த நோய்கள் விலகுவதை காணலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+