Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவணி அமாவசை.. சிம்ம ராசியில் சூரியன் சந்திரன் கூட்டணி.. எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம். இன்றைய தினம் ஆவணி அமாவாசையை முன்னிட்டு இன்றைய தினம் ஏராளமானோர் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் சூரியன் புதனோடு சந்திரன் இணைந்துள்ளார். தந்தையின் வீட்டில் தாய் பயணம் செய்வது சிறப்பு எனவேதான் இந்த நாளில் நாம் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களை மறக்காமல் செய்ய வேண்டும் அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

Aavani Amavasai Tharpanam importance and benefits for 12 zodiac signs

அமாவாசை தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பழங்கள் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள், பலகாலமாக பித்ரு ஆராதனைகளைச் செய்யாத பாவத்துக்கு ஆளானவர்கள் ராமேஸ்வரம் புண்ணியத் தலத்துக்குச் சென்று தில ஹோமம் செய்வது மிகவும் அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த ஆச்சார்யர்களால்தான் செய்ய வேண்டும் என்பது முக்கியம்!

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினம் என்பது முன்னோர்களை வழிபடும் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று நம் முன்னோர்களை நினைத்துக் குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் வார்த்து வழிபட்டால் நம் துன்பங்கள் தீர்ந்து இன்பங்கள் பிறக்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினமான இன்று மேஷ ராசியில் ராகு பகவான் சஞ்சாரம் செய்கிறார். மேஷ ராசிக்காரர்கள் கட்டாயம் சிவாலயம் சென்று வழிபடுவது செல்வ வளம் சேரும். ரிஷப ராசிக்காரகள் இந்த நாளில் முருகப்பெருமான் சந்நிதிக்குச் சென்று வழிபட வேண்டியது அவசியம். மிதுனம் ராசிக்காரர்கள் இன்று அன்னதானம் செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக சந்நியாசிகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது. கடக ராசிக்காரர்கள் இன்று பச்சரிசி தானம் கொடுப்பது சிறப்பு. பசுமாட்டிற்கு பச்சரிசியோடு வெல்லமும் சேர்த்துக்கொடுத்தால் மிகவும் நல்லது.

சிம்மம் ராசிக்காரர்கள் மறைந்த நம் முன்னோர்களுக்குப் படையல் போட்டு வழிபாடு செய்வது விசேஷம். மேலும் இந்த நாளில் விநாயகப்பெருமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். கன்னி ராசிக்காரர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று மாலை சாத்தி வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். துலாம் ராசிக்காரர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வணங்கலாம். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இன்று துவரம் பருப்பு தானம் செய்வது சிறப்பும். அம்மன் ஆலயங்களுக்கு சென்று சர்க்கரை பொங்கல் தானம் செய்யலாம்.

தனுசு ராசிக்காரர்கள் வாழைப்பழம் தானம் தரலாம் ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வாழைப்பழம் தானம் கொடுப்பது நன்மையைத் தரும். மகர ராசியில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. கும்பம் ராசிக்காரர்கள் ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். மீன ராசியில் பிறந்தவர்கள் குலதெய்வக் கோயில் அருகே இருந்தால் நேரில் சென்று பொங்கல்வைத்து வழிபாடு செய்து அதனை தானம் செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+