ஆவணி மாத ராசிபலன்கள் 2019- ரிஷபம் மிதுனத்திற்கு தொட்டது துலங்கும் முயற்சி பலிக்கும்
சென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சிம்ம ராசியில் சேரும் கிரகங்களின் கூட்டணியால் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
இது. ஆவணி மாதத்தில் கிரகங்களின் இடம் மாற்றமும் நிகழ்கிறது. ஆவணி 9ஆம் தேதி சிம்மராசியில் அமரும் புதன் கன்னி ராசிக்கு 23ஆம் தேதி மாறுகிறார். சுக்கிரன் 23ஆம் தேதி கன்னி ராசியில் நீசமடைகிறார் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்வதால் நீசபங்கமடைகிறார் சுக்கிரன்.
மாத இறுதியில் கிரகங்களின் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டாலும் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆவணி மாதத்தில் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

வசதி வாய்ப்பு அதிகம்
ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வசதிகள் அதிகம் கிடைக்கும். சூரியன் சுக்கிரன் இணைந்து செவ்வாயுடன் சுக ஸ்தானமான 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். ஆடை அணிகலன்கள், சொத்து சேர்க்கைகள் ஏற்படும். குருவின் பார்வை உங்க ராசி மீது விழுவதால் எதையும் தைரியமாக தொடங்குவீர்கள். ஆவணியில் புதிய விசயங்களை செயல்படுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

வண்டி வாகனம் வாங்கலாம்
ரிஷப ராசிக்கு நன்மைகள் நடைபெறும் மாதம் என்றாலும் அஷ்டம சனி ஞாபக மறதியை தருவார். சோம்பலை தவிர்த்து விடுங்கள். படைப்பாளிகளுக்கு நன்மைகளை தரும். பெரியவர்களின் மனம் வருத்தப்படும் படி செய்ய வேண்டாம். தொட்டது துலங்கும். வண்டி வாகனம் வாங்கலாம். வார்த்தையில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். யோகா செய்யவும். சிவ ஆலய தரிசனம் நல்லது பசு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்

பண வருமானம்
ஆவணி மாதம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு அற்புதம் மூன்றாம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரத்தால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆட்சி பெற்ற சூரியனால் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிந்து செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள் செல்வாக்கு புகழ் தேடி வரும். செவ்வாய் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக இருக்கும். தகவல் தொடர்பு விரிவடையும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை
தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் வரும். ஒதுக்கியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். பணம் கொடுக்கல்வாங்கல் முடிவுக்கு வரும். கடல் கடந்த பயணம் நன்மையில் முடியும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். கால் கை மூட்டுக்களில் பிரச்சினைகள் வரலாம். குடும்ப விசயத்தில் கவனம் தேவை. காதலர்கள் கவனம் தேவை.

தம்பதியர் ஒற்றுமை
அரசாங்க உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய புரமோசன் வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். புத்திரபாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு கூடும். உடன் பிறந்தவர்களினால் நன்மைகள் நடக்கும். சிவ ஆலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு பசு நெய் தீபம் ஏற்றுங்கள்.












Click it and Unblock the Notifications