ஆடிப்பூரம் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்கத்தேரோட்டம் தடையின்றி நடக்குமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் எடுக்கவும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர்: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்குள் நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கோவிலுக்கு உள்ளேயே ஒன்பது நாள் திருவிழாவை நடத்தவும் 24ஆம் தேதி தங்கத்தேர் இழுக்கவும் அந்த கடிதத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை பூட்டப்பட்டதால் எந்த விழாக்களும் நடைபெறவில்லை. கோவிலுக்குள் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.
தற்போது சிறுகோவில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இந்த முறை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இந்த முறை விழாவை தடையில்லாமல் உள்ளேயே நடத்தவேண்டும் என்று அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் விழாவை நடத்த அனுமதி கோரி கோவில் நிர்வாகத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் ஆண்டாள் அவதரித்தார். அந்த கண்ணனை காதலனாக பாவித்து இறைவனின் திருவடி சேர்ந்தார். ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெறும். தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 16ஆம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறும் என்று தெரிகிறது. இதனால் ஆடிப்பூர திருவிழாவில் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டு பூஜைகளை செய்யவும் கோவிலுக்கு உள்ளேயே ஒன்பது நாள் திருவிழாவை நடத்தவும் 24ஆம் தேதி தங்கத்தேர் இழுக்கவும் அனுமதிக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதனிடையே திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ஆடிப்பூர விழாவில் கொடியேற்றமின்றி பூஜைகள் மட்டும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை அம்பாள் சன்னதியில் தினமும் ஹோமம் நடத்தப்பட்டு, கும்பம் வைத்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க வசதியாக செயலி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications