Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை.. மனைவிக்கு தங்கம் வாங்கிக் கொடுத்த தங்கங்கள்...எத்தனை கிலோ விற்பனை தெரியுமா

அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அள்ளியது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நகைகள் விற்பனை செய்யப்பபட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி, பொங்கல் பண்டிகை போல அட்சய திருதியை தினத்தையும் இப்போது அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அட்சய திருதியை தினமான நேற்று ஒரு கிராம் தோடு முதல் பல சவரன் நகைகள் வரை அள்ளி விட்டனர் மக்கள். தமிழகத்தில் மட்டும் 18 ஆயிரம் கிலோ நகை விற்பனையாகியிருப்பதாக சொல்கிறது ஒரு புள்ளி விபரம்.

அட்சய திருதியை தினத்தில் தங்க நகை வாங்கினால் அந்த தங்கமானது மேன்மேலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நகைக்களில் கூட்டம் அலைமோதியது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகாலமாக அட்சய திருதியை நாளில் ஆன்லைனில் விற்பனையானது.

இந்த ஆண்டு நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில் நகைக்களில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரைக்கும் விற்பனையானது. விற்பனையாளர்களும் சற்று கூட முகம் சுளிக்காமல் சோர்வோ, களைப்போ ஏதுமின்றி புன்சிரிப்போது நகைகளின் மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து விற்பனை செய்தனர்.

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கத்தின் மீதான ஆர்வம்

தினசரி கூலி வேலை செய்யும் ஏழைகளோ... மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பத்து மக்களோ... கோடி கோடியாக சம்பாதிக்கும் பணக்காரர்களோ யாராக இருந்தாலும் தங்கத்தின் மீதான ஆசையும் அதை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆர்வமும் இல்லாமல் இல்லை... மாதா மாதம் சீட்டு போட்டு பணம் சேர்த்து சில கிராம்கள் தங்கம் வாங்குவது என்பது ஏழை பெண்களின் விருப்பம். அதே போல பல சவரனில் நகை வாங்கி அணிய வேண்டும் என்பது பணக்கார குடும்பத்து பெண்களின் ஆசை. மொத்தத்தில் நகை மீது அனைத்து தரப்பு பெண்களுக்குமே ஆர்வம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

தங்க நகை சேர்ப்பது ஏன்

தங்க நகை சேர்ப்பது ஏன்

இந்திய பெண்களைப் பொருத்தவரை தங்க நகை என்பது முதலீடு. ஏதாவது அவசரம் ஆத்திரம் என்றால் அதை எளிதில் அடகு வைத்தோ விற்பனை செய்தோ பணமாக்கி விடலாம். எனவேதான் தங்களின் பிள்ளைகளுக்கு குறிப்பாக மகளுக்கு திருமணத்தின்போது நகைகளை சீதனமாக சேர்த்து கொடுக்கின்றனர்.

தங்கம் அணிவது ஐஸ்வர்யம்

தங்கம் அணிவது ஐஸ்வர்யம்

தங்கம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தங்க நகை அணிந்தால் ஐஸ்வர்யம் பெருகும். தங்கம் வீட்டில் சேர சேர செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது எனவேதான் எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து ஆண்டிற்கு சில கிராம்கள் தங்க நகை வாங்குகின்றனர்.

பெருகிய நகைக்கடைகள்

பெருகிய நகைக்கடைகள்

மக்களின் தேவை அதிகரிக்கவே நகைக்கடைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் பலருக்கும் அட்சய திருதியை என்றாலே என்னவென்று தெரியாது. படிப்படியாக நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இப்போது முக்கிய நகரங்களில் நகைக்கடைகளின் எண்ணிக்கையும் பல்கி பெருகிவிட்டன. தினசரி புதிது புதிதாக நகைக்கடைகள் திறந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அதிகாலை முதல் விற்பனை

அதிகாலை முதல் விற்பனை

அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நகைக்கடைகளில் வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி, விதம் விதமான அலங்காரங்கள் செய்து மக்களை வரவேற்றனர். நகைக்கடைகள் அதிகாலை 5 மணிக்கே தயாராகி விட்டன.

அசராத விற்பனை

அசராத விற்பனை

அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நகைக்கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து நகைகளை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடை வீதிகளில் அசராமல் விற்பனை நடைபெற்றது. வாகன நெரிசலும் ஏற்பட்டது.

ரூ.9 ஆயிரம் கோடி

ரூ.9 ஆயிரம் கோடி

நேற்றைய தினம் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் கிலோவுக்கு மேலான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது 30 சதவிகிதம் கூடுதல் எனவும் நகை விற்பனையாளர்கள் கூறினர்.

செல்வ வளம்

செல்வ வளம்

நேற்றைய தினம் நகைக்கடை வீதிகளில் அலைமோதிய கூட்டத்தை பார்த்த போது கொரோனா கால சூழ்நிலையால் பலரிடமும் பணப்புழக்கம் இல்லை என்றும் வேலையிழப்பு ஏற்பட்டதால் பலரும் வறுமையில் இருப்பதாகவும் சொன்னது உண்மையில்லை என்றே தோன்றியது. கொரோனாவால் சிலருக்கு வருமானம் குறைந்திருக்கலாம் ஆனால் மக்களின் சேமிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. லாக்டவுன் காலத்தில் வேலையிழந்தவர்கள், வருமானம் இழந்தவர்கள் கூட சில மாதங்களில் மீண்டு விட்டனர் என்றே தெரிகிறது. நகைகளை விதம் விதமாக ரகம் ரகமாக தேர்வு செய்து அணிந்தனர் பெண்கள். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறிய ஆண்களும் பிரேஸ்லெட், செயின் என வாங்கி அணிந்தனர். எப்படியோ தங்கங்கள் மனைவிக்கு தங்கம் வாங்கிக்கொடுத்து இல்லத்தரசிகளிடம் குட்மார்க் வாங்கி விட்டனர் குடும்பத்தலைவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+