கறுப்பு பணத்தை ஒழிக்க கிளம்பிட்டாரு கந்தசாமி... இனி ஐடி சோதனை அனல் பறக்கும்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது தமிழ்நாடு போக்குவரத்து துறை போராட்டத்தை விட ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உள்ள கணக்கு நோட்டு பற்றிதான்.

சமீபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தரின் கனவில், கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது. இதனையடுத்து கணக்கு நோட்டு வைத்து பூஜைக்கப்படுகிறது. இதனால் கணக்கில் வராத சொத்துக்கள் எல்லாம் வெளிவரும் என பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை ஆண்டவன் கோயில் முருகனுக்கு புகழ் பெற்றது. இக்கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் வந்து இந்தப் பொருளை வைத்து பூஜை செய்யுங்கள் என்று முருகன் கட்டளையிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அனுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவிலில் பூ வாக்கு கேட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின், பெட்டியில் அந்தப் பொருள் வைக்கப்படும்.

கறுப்பு பண ஒழிப்பு

கறுப்பு பண ஒழிப்பு

இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, இரும்பு சங்கலி என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பூஜை செய்யப்பட்ட பொருட்கள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2015 அக்டோபர் 10ல், கணக்கு நோட்டு, உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது. தற்போது இரண்டாவது முறையாக, கணக்கு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனிபகவான்

சனிபகவான்

ஜோதிடத்தில் பினாமி சொத்துக்களும் வருமான வரித்துறை அதிரடி சோதனைகளும்:

பினாமி சொத்துகளை கண்டுபிடிப்பது மற்றும் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை ஆகியவைகளுக்கு ஜோதிடத்தில் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது என கூறுகிறது பாரம்பரிய ஜோதிடம். அனைத்துவிதமான வரிகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் என கூறுகிறது பாரம்பரிய ஜோதிடம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

வரியை குறிக்கும் பாவம் காலபுருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகமாகும். மேலும் பாவாத்பாவ முறையில் எட்டுக்கு எட்டாம் பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் ஆகிய மிதுனமும் அதன் அதிபதியும் வரியோடு தொடர்புடைய பாவம் மற்றும் கிரகமாகும். சனி, எட்டாம் பாவம் அதன் அதிபதி மற்றும் அதில் இருக்கும் கிரகம் தொடர்பு கொள்ளும் கிரகம் ஆகியவற்றினை கொண்டு ஒருவர் செலுத்தும் வரியினை பற்றியும் வரியினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அறிய முடியும்.

தனுசு ராசியில் சனி

தனுசு ராசியில் சனி

புதன், மூன்றாம் பாவம், அதிபதி, அதோடு தொடர்புடைய கிரகம் ஆகியவற்றை கொண்டு வரி கணக்குகள், வரி குறித்த ஆவணங்கள், கடித போக்குவரத்துகள் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். ரிஷப லக்னத்தை கொண்ட சுதந்திர இந்தியாவின் எட்டாமிடமான தனுர் ராசியில் சனைச்சர பகவான் பிரவேசம் செய்ததை தொடர்ந்து வருமான வரித்துறையின் திடீர் சோதனைகள் இந்தியாவையே உலுக்கியது என்பது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

கிரகங்களின் இணைவு

கிரகங்களின் இணைவு

இந்த நிலையில் தற்போதைய கோசாரத்தில் சனைச்சரபகவான் தனுர் ராசியில் பயணம் செய்வதை தொடர்ந்து சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரஹங்களும் இணைவு பெற்றதும் தன காரகர்களான குருவும் சுக்கிரனும் பரிவர்தனை பெற்று நிற்பதும் கால புருஷனுக்கு எட்டாமிடமான விருச்சிகராசியை ராகு தனது திரிகோண பார்வையை பெற்று நிற்பதும் இந்த கணக்கில் வராத பணவிவகாரங்கள் மேலும் பல வெளியாவதை உறுதி செய்கிறது.

திருநள்ளாறு சனிபகவான்

திருநள்ளாறு சனிபகவான்

வரியினால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வணங்க வேண்டிய தெய்வம் சனைஸ்வர பகவான்தான். அவரை திருநள்ளாறு, குச்சனூர், சனி சிங்கனாபூர் ஆகிய ஸ்தலங்களில் சென்று வணங்குவது வரியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். வரியினால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் எல்லாம் அனைகமாக அஷ்டம சனி காலங்களில் மற்றும் லக்னத்திற்ககு எட்டில் சனி வரும்போது சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மை அவசியம்

நேர்மை அவசியம்

சனைச்சர பகவான் ஒரு நீதிமான் என்பது யாருக்கும் பாரபட்சம் பார்க்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே! எனவே அநியாய வழியில் சேர்த்த சொத்துக்களுக்கு அரசாங்கத்திற்கு கணக்கு காண்பித்து நேர் செய்துக்கொள்வதும், கணக்கு காட்டாமல் சேர்த்த சொத்துக்களை கொண்டு பல தான தர்மங்களை செய்வதும் சனைச்சர பகவானின் கிடுக்கிபிடியிலிருந்து விடுபட ஓரளவு உதவும். மொத்ததில் நேர்மையாக இருப்பது மட்டுமை சிறந்த பரிகாரமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sivanmalai is located in the Tiruppur District, Tamilnadu. It is 5 kms away from Kangeyam town towards Tiruppur. The presiding deity in the sivanmalai is Lord Murugan,Valli and Deivayanai. Devotees coming to the temple needs to check what object is placed in the order box. After checking this devotees needs to enter the main sanctum.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற