கல்யாண வயதுதான் வந்திருச்சுடி என்று சொல்லியும் பொண்ணு திரும்பி பார்க்கலயா? - பரிகாரங்கள்
2 கே பசங்களுக்கு எல்லாம் பொண்ணு கிடைக்குது கல்யாணம் நடக்கப் போகுது நமக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குதே என்று 90 கிட்ஸ் பசங்க ஏங்குறாங்க. சில பெண்களும் எத்தனையோ பரிகாரம் பண்ணியும் கல்யாணம் நடக்கலையே என்
சென்னை: கல்யாணத்திற்கு காத்திருக்கு 90 கிட்ஸ் பலருக்கும் 2020 ஆண்டிலாவது கல்யாணம் நடக்குமா என்ற கவலை இருக்கும் குரு பலம் இருக்கா? குரு பார்வை வந்திருச்சுன்னு சொல்லியும் ஒரு பொண்ணு நம்மை திரும்பி பார்க்கலயே என்று கவலைப்படுகிறீர்களா உங்களுக்குத்தான் இந்த பரிகாரம், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பரிகாரங்கள்.
செவ்வாய் தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், என எத்தனையோ தோஷங்களும் அதற்கு பரிகாரமும் செய்து பல இளைஞர்களும் இளம்பெண்களும் சலித்து போய் இருக்கின்றனர். தோஷம் என்று இருந்தால் பரிகாரங்கள் என்று ஒன்று இருக்கும். நவ கிரகங்களும், பஞ்ச பூதங்களும் பரிகாரங்களுக்கு கட்டுப்பட்டவைதான். உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.
திருமண தடைகள் எல்லாம் செவ்வாய் தோஷம், குரு தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், சந்திரன் சனி சேர்க்கையால் புனர்ப்பு தோஷம் என பலவித தோஷங்கள் ஏற்படுகின்றன. இந்த தோஷங்கள் நீங்கி கெட்டி மேளச்சத்தம் கேட்க பல பரிகாரங்களே ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஜோதிடர் அஸ்ட்ரோ பழனியப்பன் தனது முகநூல் பக்கத்தில் சில பரிகாரங்களை பகிர்ந்துள்ளார்.

துர்க்கை அம்மனுக்கு விளக்கு
பசலைக்கீரை, புல், அகத்திக் கீரை ஆகியவற்றை ஏதாவது ஒன்றை தினசரி பசு மாட்டிற்குக் கொடுங்க. திருமணம் ஆகும் வரை கொடுக்கலாம் ராகு காலத்தில் அகல் விளக்கு துர்க்கை அம்மனுக்கு போடலாம். பெண்களோ, ஆண்களோ போடலாம். நல்லெண்ணெய், நெய் தீபம் போடலாம். துளசி கல்யாணம் செய்தால் திருமணம் கை கூடி வரும்.

செவ்வாய்கிழமை பரிகாரம்
ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும். ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு 5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும். ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு 11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.

திருமண பரிகாரம்
அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில் விநாயகர் இருந்தால் அந்த விநாயகரை 108 முறை சுற்றி வர திருமணம் கை கூடி வரும். அதிகாலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கேற்றி பஞ்சு அல்லது தாமரைத்தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி "ஓம் ஆனைமுகன் வருக கலைமகள்,மலைமகள்,திருமகள் வருக தேவர்கள் யாவரும் சேர்ந்திங்கு வருக என்ற துதியை 3 தடவை ஜெபித்து விளக்கிற்கு சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபம் காண்பித்து விளக்கின் பாதத்தில் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்று மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும் பின் சில நிமிடங்கள் விளக்கின் மும் அமர்ந்து விரைவில் நல்ல இடத்தில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டியபின் அந்தக் குங்குமத்தை வழித்து எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொண்டு அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.

வாழை மரம்
ஓம் பார்வதி பதயே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். பாலபிஷேகம் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம். சீக்கிரம் திருமணம் நடைபெறும். 35 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் சிலர் சிரமப்படுகின்றனர். அவர்கள் வாழை மரம் நட்டு வைத்து பராமரிக்க வேண்டும். மகாவிஷ்ணு படத்தின் முன்பு வேண்டிக்கொள்ளுங்கள். ஞாயிறு கிழமைகளில் உப்பில்லாத சாப்பாடு சாப்பிடுங்கள் கால தாமதமான திருமணம் நடைபெறும்.

குங்குமப்பூ குளியல்
குளிக்கும் முன்பு மஞ்சள் தூள் ஒரே ஒரு குங்குமப்பூ போட்டு குளிக்கலாம் நன்மைகள் நடக்கும். ஆண்களுக்கு குங்குமப்பூ மட்டும் போடுங்க மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ சேர்த்த திலகம் வைக்க திருமணம் கை கூடி வரும். இந்த பரிகாரம் 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் செய்ய வேண்டும். இப்படி குளித்து வர விரைவில் திருமணமாகும்.திருமணத்திற்கு வரன் பார்க்க வரும் போது புதிய துணி போடுங்க தோஷங்கள் இல்லாமல் கை கூடி வரும்.

அம்மன் மந்திரம்
ஏதேனும் ஒரு ஞாயிறு,செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் ஆலயம் சென்று தேவியின் திருவடியில் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்று மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.பின் சில நிமிடங்கள் அம்மன் முன் அமர்ந்து அந்தக் குங்குமத்தை எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்து அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் பூசி வர விரைவில் திருமணமாகும். இதை ஆலயத்தில் செய்ய முடியாதவர்கள் இதே முறைப்படி வீட்டிலேயே செய்து பலன் பெறலாம்.

திருமணம் நடைபெறும்
ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும். சனிக்கிரகம் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரத் சனிபகவானால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications