ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சா... கிரகக் கோளாறுதான்- பரிகாரம் பண்ணலாம்!
கட்சி கொள்கை என்னன்னு கேட்டதுக்கே தலை சுற்றிய அறிமுக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். மங்கையர் முதல் முதியவர் வரை தலை சுற்றலுக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
சென்னை: சிலருக்கு பித்தத்தினால் தலை சுற்றல் வரும். சிலருக்கோ நாட்டில் நடக்கும் சம்பவங்களை நினைத்தால் தானாக தலை சுற்றும். உயரமான இடத்தில் இருந்து பார்த்தால் பலருக்கு தலை சுற்றும். இதற்குக் காரணம் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்கள்தான்.
ஜாதகத்ததில் எந்த பாவகத்தில் எந்த கிரகம் அமர்ந்திருந்தால் தலை சுற்றல் வரும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தலை சுற்றலுக்கு காரணம் குரு, கேது, புதன், சனி பகவானின் சேர்க்கை என்கிறது மருத்துவ ஜோதிடம்.
தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். காதில் பிரச்சினையிருந்தாலும் தலை சுற்றல் வரும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கிறுகிறுப்பு என்பது மிதமான தலைச்சுற்றல். இதற்கு அடுத்த நிலையாக தலைச்சுற்றல், குமட்டல் வரும். தலை சுற்றலுக்கு ஜோதிட ரீதியான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

தலை சுற்றல்
காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை சுற்றல் வரும். ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து இல்லை என்பதே ஆறுதல்.

சத்தான உணவுகள்
சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். மன அழுத்தம் இன்றி தவிர்க்க வேண்டும். உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கிரக கோளாறுகள்
புதன் கிரகம் பாதிப்படைந்திருந்தால் நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய், தோல் பிரச்சினைகள், கண், மூக்கு, கழுத்து, இவற்றில் ஏற்படும் நோய், சளி இருமல் தொல்லை, வெண்குஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
குரு பாதிக்கப்பட்டிருந்தால் சர்க்கரை நோய்,காது சம்மந்தப்பட்ட நோய், பித்தம் சம்மந்தப்பட்ட நோய் என்பன ஏற்படலாம்.

ஆறு எட்டாம் வீடுகள்
ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறாம் வீடு நோயைக் குறிக்கும். இது ரோகஸ்தானம் எனப்படும். மேலும் எட்டாம் வீடு ஆயுள் ஆரோக்கியத்தை குறிக்கும். எனவே ஒருவரது ஜாதகத்தில் 6ம், 8ம் வீடுகள் அதிலுள்ள கிரகம் அதன் ஆதிபத்தியம் பெற்ற கிரகம், மேலும் அவ்வீடுகளை பார்க்கும் கிரகம் என்பவற்றைக்கொண்டு ஒருவரது நோயை சரியாகக் குறிப்பிட முடியும்.

5ஆம் வீட்டில் கேது சனி
ஒருவரது ஜாதகத்தில் 5ல் சனி இருப்பின் நோய் ஏற்படும். கேது பகவான் 5ஆம் வீட்டில் சனிபகவானுடன் அமர்ந்திருந்தால் கேது பகவானின் தசா புத்தி காலத்தில் தலை சுற்றல் நோய் வரும். தூங்கி எழுந்த உடன் அவருக்கு தலை கிறு கிறுவென சுற்றும். செவ்வாய் உடன் இருந்தால் விமானத்தில் பறக்கும் போது தலை சுற்றல் வரும்.

புதன், குரு
பித்தத்திற்கு காரணம் குரு பகவானும் கேது பகவானும்தான். புதனோடு இணைந்து கேது 5ஆம் வீட்டில் அமர்ந்து கேது தசை நடந்தால் வாகனத்தில் பயணிக்கும் போது தலை சுற்றல் வரும். அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும். வண்டி, வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

தட்சிணாமூர்த்தியை வணங்கவும்
தலை சுற்றல், காது பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களை பார்த்து மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் கிரகங்களையும் சாந்தி செய்ய வேண்டும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பச்சைப்பயறு வைத்து புதன் பகவானை வணங்க வேண்டும். நவ கிரகங்களில் கேது பகவானுக்கு விளக்கேற்றி வணங்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications