அதிசார குரு பெயர்ச்சி 2021: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் ராஜயோகம் தேடி வரும்
கும்ப ராசியில் அதிசாரமாக சென்று அமரப்போகும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். அதிசார குரு பெயர்ச்சியால் கிடைக்கும் குரு பார்வை உங்களுக்கு கோடி புண்ணியத்தை தரப்போகிறது.
சென்னை: குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். அதிசார குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப் போகிறது. குருபகவான் ஏப்ரல் 5ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணம் செய்யப்போகிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். குருவின் சஞ்சாரம் பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவத்தின் படி குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மகர ராசியில் பயணம் செய்கிறார். அதிசாரமாக சஞ்சரிக்கும் குருபகவான் 11ஆம் வீடான கும்ப ராசியில் பயணம் செய்கிறார். மிதுனத்திற்கு குரு பகவான் 8ஆம் வீடான மறைவு வீட்டில் இருந்து ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு.
குருவின் பார்வை 5, 7, 9ஆம் இடங்களின் மீது விழும். குருபகவான் மிதுன ராசியின் மீது முதலில் பார்வையை பதிக்கிறார். இதன் மூலம் மன குழப்பங்கள் நீங்கும். வெற்றிகள் தேடி வரும். அஷ்டமத்து சனியும், அஷ்டமத்து குருவினாலும் கஷ்டங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இனி நல்ல காரியங்கள் அதிகம் நடைபெறக்கூடிய காலம் வந்து விட்டது.

நல்ல வேலை கிடைக்கும்
நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்திலும் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அதிசார காலத்தில் அரசியல்வாதிகளுக்கு யோகமான காலமாக அமைந்துள்ளது. தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழில் செய்பவர்களுக்கு இது யோகமான காலகட்டமாக அமைந்துள்ளது.

வெற்றிகரமான குரு பெயர்ச்சி
ராசிக்கு மூன்றாவது வீட்டின் மீது குருவின் பார்வை விழுகிறது. சகோதரர்களிடையே இருந்த சங்கடங்கள் நீங்கும். சகோதரர்களின் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். புதிய காதல் மலரும். மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தும் காலம் வந்து விட்டது.

குரு பார்வையால் யோகம்
ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும். திருமணம் முடிந்து குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

எதிர்ப்புகள் நீங்கும்
களத்திரகாரகன் குரு பகவானின் பார்வை உங்களுக்கு சாதகமான இடங்களில் விழுவதால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். வேலை தொழிலில் இருந்த தடைகள் நிவர்த்தி அடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல திக்கு தெரியாமல் தவித்த உங்களுக்கு குருவின் பார்வையால் நல்ல வெளிச்சம் கிடைக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications