அதிசார குரு பெயர்ச்சி 2021: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, புரமோசன் தரப்போகிறார் குருபகவான்
ரிஷப ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக சென்று பத்தாம் வீட்டிற்கு செல்கிறார். பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். பத்தாம் அதிபதியின் வீட்டிற்கு குரு பகவான் செல்வதால் திடீர் திருப்புமுனைகள் ஏற்படும்.
சென்னை: குரு பகவான் மகர ராசியில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக சென்று பத்தாம் வீட்டில் அமர்கிறார். பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். பத்தாம் அதிபதியின் வீட்டிற்கு குரு பகவான் செல்வதால் திடீர் திருப்புமுனைகள் ஏற்படும். வேலையில் இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மைகள் நடைபெறப்போகிறது.
சார்வரி வருடம் பங்குனி மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 12.42 மணிக்கு குரு பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி இந்த அதிசார குரு பெயர்ச்சி நிகழ்கிறது. 160 நாட்கள் கும்ப ராசியில் தங்கியிருக்கும் குரு பகவான் பிலவ வருடம் ஆவணி மாதம் 29ஆம் தேதி மகர ராசிக்கு திரும்புவார். செப்டம்பர் 16 ஆம் தேதி வரை குரு பகவான் கும்ப ராசியில் தங்கியிருப்பார்.
குரு பகவான் அதிசாரமாக பயணிப்பார். அதிசார காலத்தில் அவிட்ட 2,3,4ஆம் பாதங்களிலும் சதய நட்சத்திரம் ஒன்றாம் பாதத்திலும் பயணம் செய்வார். குருவின் பயணம் அவிட்டம் நட்சத்திரத்தில் செல்லும் போது அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அவிட்டம் நட்சத்திர அதிபதி செவ்வாய். உங்கள் ராசிக்கு ஏழாம் அதிபதி, 12ஆம் அதிபதி. இந்த கால கட்டத்தில் திருமண யோகம் கைகூடி வரும். வெளியூர், வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் வரும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்கு யோகம்
ரிஷப ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக திகழ்வார்கள் அதிர்ஷ்டசாலிகள். அழகானவர்கள், அமைதியானவர்கள். மகிழ்ச்சியான மனநிலை கொண்டவர்கள். வசீகரமானவர்கள். இளமையானவர்கள். கும்பத்தில் குரு வளைய குரு. ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி யோகர். சனியின் வீட்டில் குரு பலத்தோடு அமர்வதால் யோகங்கள் தேடி வரும்.

பதவி உயர்வு வரும்
குருபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் இருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். வேலையில் மாற்றம் வரும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உரும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வேலையில் இருந்த குறைகள் நீங்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வும் பட்டங்களும் தேடி வரும்.

அரச பதவி கிடைக்கும்
குரு உங்கள் ராசிக்கு 8, 11ஆம் வீட்டில் அதிபதி. 8க்கு உடைய அதிபதி பத்தில் அமர்வதால் செய்யும் தொழிலில் வளர்ச்சியும் வருமானமும் கூடும். அரசு யோகவும், அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும். மனத்தெளிவு அதிகரிக்கும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பண வரவு அதிகரிக்கும்
குரு பகவான் தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்தாம் இடம், ஏழாம் இடம், ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். முதலில் குரு ரிஷப ராசிக்கு இரண்டாம் வீடான மிதுனத்தை பார்க்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாக்குபலம் அதிகரிக்கும். பணம் சரளமாக புழங்கும். கொடுத்த பணம் வசூலாகும். சேமிப்பும் அதிகமாகும்.

உயர்கல்வி யோகம்
குரு ஏழாம் பார்வையால் சிம்ம ராசியை பார்க்கிறார். இது ரிஷப ராசிக்கு நான்காம் வீடு. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கல்வியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நீங்கும். மனதில் பாரங்கள் குறையும். சொத்து சேர்க்கை ஏற்படும். உயர் பதவிகள் தேடி வரும்.

குரு பகவானை வணங்குங்கள்
ஆறாம் இடம் கடன், நோய், வழக்கு ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுகிறார். நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். இந்த கால கட்டத்தில் ஆலங்குடி, தென் திட்டை, பாடி திருவலிதாயம் குருபகவானை சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications