For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகாசியில் 3 கிரக கூட்டணி... சனி, குரு, சுக்கிரன் வக்ரம் - கொரோனா வைரஸ் வீரியமடையுமா?

கொரோனா வைரஸ் காலத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம் மனிதர்களுக்கு சாதகமாக இல்லை.

Google Oneindia Tamil News

சென்னை: வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் சூரியன், புதன் சுக்கிரன் கிரகங்கள் கூடியுள்ளன. சனி மகரத்தில் வக்ரமடைந்திருக்க குருவும் மே 14ஆம் தேதி முதல் வக்ரமடைகிறார். ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரனும் வக்ரமடைகிறார். இந்த கிரகங்களின் கூட்டணி வக்ர சஞ்சாரங்களினால் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் படிப்படியாக குறையுமா? மேலும் வீரியமடையுமா? என்று பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 45 லட்சம் பேரை பாதித்துள்ளது. லட்சக்கணக்கானோரின் உயிரை குடித்துள்ளது. லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த உலகப்பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்துள்ளது.

சில தளர்வுகளுடன் லாக்டவுன் மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுவதுமாக முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி ஜோதிட ரீதியான கணிப்புகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

திருப்பதி ஏழுமலையானுக்கே பணமில்லையா? அப்புறம் எப்படி குபேரனுக்கு வட்டி கட்டுவாருதிருப்பதி ஏழுமலையானுக்கே பணமில்லையா? அப்புறம் எப்படி குபேரனுக்கு வட்டி கட்டுவாரு

தனுசு ராசியில் ஆறு கிரக கூட்டணி

தனுசு ராசியில் ஆறு கிரக கூட்டணி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூட்டணி சேர்ந்தன. அப்போது நிகழ்ந்த சூரிய கிரகணமும் மிகப்பெரிய கொள்ளை நோயை சீனாவில் தோற்றுவித்தது. கொரோனா வைரஸ் என்ற அந்த கொள்ளை நோய் இந்தியாவிற்குள் வரும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினையில்லாமல் இருந்தது.

மகரத்தில் 3 கிரகங்கள்

மகரத்தில் 3 கிரகங்கள்

மிதுனம் ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. விரையில் இதன் தாக்கம் குறையும் என்று ஜோதிடர்கள் ஆறுதல் செய்தி சொன்னாலும் குரு பகவான் கடந்த மார்ச் மாதம் முதல் அதிசாரமாக மகரம் ராசியில் சனியோடு இணைந்துள்ளார் கூடவே செவ்வாய் பகவானும் இணைந்து ஒருவித கலவர மனநிலையை ஏற்படுத்தியோடு கொரோனாவின் வீரியத்தை அதிகப்படுத்தியது.

வைகாசியில் எப்படி

வைகாசியில் எப்படி

ராகு பகவான் தற்போது மிதுனம் ராசியில் சஞ்சரித்தாலும் மிருகஷீரிடம் நட்சத்திற்கு மாறியுள்ளது சற்றே ஆறுதலான செய்தி. அதோடு வைகாசி மாதத்தில் சுக்கிரன், சூரியன், புதன் ரிஷபத்தில் கூட்டணி சேருகின்றன. அதுமட்டுமல்லாது மகரத்தில் உள்ள சனியும், குருவும் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு நகர்கின்றன. சுக்கிரனும் வக்ரமடைகிறார். மே 11ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். மே 13ஆம் தேதி முதல் ரிஷபம் ராசியில் உள்ள சுக்கிரன் வக்ர கதியில் சஞ்சரிப்பார். மே 14ஆம் தேதி முதல் மகரம் ராசியில் அதிசாரமாக உள்ள குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார்.

ரிஷபத்திற்கு மாறும் ராகு

ரிஷபத்திற்கு மாறும் ராகு

முக்கிய கிரகங்களின் வக்ர சஞ்சாரத்தினால் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாவதோடு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கும். ராகு பகவான் செப்டம்பர் மாதம் மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கேதுவும் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் இடமாற்றம் நோய் பாதிப்பை படிப்படியாக குறைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வீட்டிற்குள் அடங்கியிருங்க

வீட்டிற்குள் அடங்கியிருங்க

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் அமைதியாக அடங்கியிருத்தலே நல்லது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியுடனான போர் இப்போது உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக லாக் டவுன் நீடிப்பதால் வேலையிழப்பு, வருமானமில்லாமல் பொருளாதார சுணக்கம் நிலவுகிறது. இந்த வைரஸ் பாதிப்பும் பொருளாதார சுணக்கமும் முடிவுக்கு வர ராகு காலத்தில் வீட்டில் விளக்கேற்றி துர்க்கையை வணங்க வேண்டும். குல தெய்வத்தின் படம் வைத்திருப்பவர்கள் நோய் பாதிப்பு வராமல் காக்க குல தெய்வத்திடம் வேண்டிக்கொள்ளலாம். கொரோனா வைரஸ் அசுரனை அழிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

English summary
Novel coronavirus has made a huge impact across the entire world with many wondering if the global economy will ever get back to normaly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X