பங்குனி அமாவாசை : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை வெள்ளிக்கிழமை முதல் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத பிரதோசம், அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு நான்கு நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்கள் பூமி என போற்றப்படும் இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏப்ரல் 9ஆம் தேரி வெள்ளிக்கிழமை முதல் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் பக்தர்கள் மலையின் மேல் தங்குவதற்கு அனுமதி இல்லை. சாமி தரிசனம் முடிந்த உடன் பக்தர்கள் மலையை விட்டு இறங்கி விட வேண்டும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் ஆகியோர் செய்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications