இல்லறம் சிறக்க 16 தெய்வீக திருமணங்கள்- 1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாத சங்கமம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வமிகளின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 16.03.2019 சனிக்கிழமையன்று 1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கமம், சஹஸ்ர கலசாபிஷேகமும் 17ஆம
வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வமிகளின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 16.03.2019 சனிக்கிழமையன்று 1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கமம், சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. 17ஆம் தேதி ஷோடச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவில் நண்பகல் 12.00 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறார்.
13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை, சமஷ்டி உபநயனம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. கோமாதாவை போற்றி வணங்கும் விதத்திலும், முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதாவிற்கும் நந்தி பகவானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சம்பிரதாய பூஜையாக, பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெறவும், பித்ருக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், குழந்தை பாக்யம், கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான வாழ்வு வேண்டியும், அனைத்து பக்தர்களுக்கும் மேற்கண்ட தெய்வங்களின் அனுக்கிரகம் வேண்டி 300 க்கும் மேற்பட்டம் சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு ஸ்வாமிகள் ஆசிகளுடன் பாதபூஜை செய்து, புது வஸ்திரத்துடன் மங்கள பொருட்கள் அளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இல.கணேசன் பங்கேற்பு
வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் மணிபூணல் சமஷ்டி உபநயனம் நடைபெற்றது. இதில் இரத்தினகிரி தவத்திரு. பாலமுருகனடிமை ஸ்வாமிகள், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.

108 கன்யா பூஜை
14.03.2019 வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி - நெல்லிராஜா ( துளசி செடி - நெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சம் ஏற்படவும், சுப காரியங்கள் நடைபெறவும் 108 கன்னிபெண்கள் பங்கேற்ற கன்யா பூஜை நடைபெற்றது.

விவசாயம் செழிக்க திருக்கல்யாணம்
இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மி - அஸ்வத் ராஜா (வேப்ப மரம் - அரச மரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் - பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை நடைபெறுகிறது.

ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்கள்
16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமையன்று நோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மை அடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆயிரம் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞ்சர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சோடஷ திருக்கல்யாணம்
17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பக்தர்கள் முன்னிலையில், ஷண்மத தெய்வங்களுக்கு ஒரே மேடையில் ஒரே நேரத்தில் ஷண்மத பீடத்தில் ஷோடச திருக்கல்யாண மஹோத்சவம் திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும். ஸ்ரீ பிரம்மா சரஸ்வதி, ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர், ஸ்ரீ அனகாதேவி சமேத தத்தாத்ரேயர், ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, ஸ்ரீ சித்ரலேகா சமேத குபேரர், ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர், வைணவ சமய திருக்கல்யாணங்கள், ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள். ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மி சமேத நரசிம்மர், ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயவதன பெருமாள், ஸ்ரீ ரமா சமேத சத்யநாரயணர், ஸ்ரீ விஜயலக்ஷ்மி சமேத சுதர்சன பெருமாள், சூர்யனை போற்றும் விதமாக ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத பட்டாபிஷேக ராமர் திருக்கல்யாணம், ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி சமேத சரபேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ணியர் ஆகிய16 தெய்வ திருமணங்கள் நடைபெறுகிறது.

சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்
பங்குனி மாதத்தில் கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களைக் கண்டால் திருமண வரம் கிடைக்கும். ஒரே இடத்தில் நடைபெறும் 16 தெய்வீக திருமண விழாவில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்று, ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற தன்வந்திரி முரளிதர ஸ்வாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இறைப்பணியில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்












Click it and Unblock the Notifications