Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகிழ்ச்சியான பண்டிகை தீபாவளி வரப்போகிறது. மகாலட்சுமியை வரவேற்கவும் குபேர பூஜை செய்யவும் ஏற்ற நாள். பண்டிகை நாள் மகிழ்ச்சிகரமான நாள். இந்த நாளில் அதிர்ஷ்டங்களை வீட்டிற்குள் வரவழைக்க நாம் சில பொருட்களை வாங்க வேண்டும். அப்படி வாங்கும் பொருட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வரவேண்டும். தீபாவளி பண்டிகை நாளில் என்னென்ன பொருட்களை வாங்கலாம். வீட்டினை எப்படி தூய்மையாக வைத்திருக்கலாம் என்று பார்க்கலாம்.

வீட்டின் சமையலறையில் எப்போது எச்சில் பாத்திரங்களை போட்டு வைத்திருக்க கூடாது. சுத்தமில்லாத வீட்டிற்குள் மகாலட்சுமி வரமாட்டாள்.
ஒட்டடைகள் வீட்டிற்குள் இருக்க கூடாது. குழாய்களில் தண்ணீர் சொட்டவோ சுவர்களில் ஈரம் தங்கவோ கூடாது.

விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வரக்கூடாது. கரையாண்கள் சேரக்கூடாது. சூரியன் மறைந்த பின்னர் விளக்குகள் போட்ட பின்னர் வீட்டை பெருக்கி வெளியில் தள்ளக்கூடாது. ஈர துணிகளை ஊறவைத்திருக்க கூடாது. வீடு வெளிச்சமாக இருக்க வேண்டும். அழுகையும் ஒப்பாரியும் கேட்க கூடாது. சாமி பாடல்கள் மெல்லிசை பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டும் குத்துப்பாட்டுக்களை போட்டு அலற விடக்கூடாது.

சுத்தமான வீடு

சுத்தமான வீடு

வீட்டில் சமையலறையில் உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைக்க கூடாது. இல்லை என்ற எதிர்மறை பேச்சுக்களை பேசக்கூடாது. படுக்கை அறை, பூஜை அறைகளை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். செருப்பு, துடைப்பம் போன்றவற்றை அலங்கோலமாக போட்டு வைத்திருந்தால் அது தடைகளை ஏற்படுத்தும்.

வாஸ்து தோஷம் நீங்கும்

வாஸ்து தோஷம் நீங்கும்

தினமும் உங்களது வீட்டில் சுத்தமான பூக்களை வைக்கவேண்டும். வாடிய பூக்களையோ செயற்கையான பூக்களையோ வைக்கக் கூடாது. வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும். வீட்டில் அணில் மற்றும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டினால் வீட்டினுள் நேர்மறை சக்திகள் அதிகமாகி உங்களது வீட்டை தேடி அதிஷ்டம் வரும்.

பணக்கஷ்டம் நீங்கும்

பணக்கஷ்டம் நீங்கும்

தடைப்பட்ட காரியங்கள், பெயர், புகழ் என அனைத்து செல்வங்களும் வீட்டிற்குள் பெருக சில பொருட்களை வைத்தால் நமது பணக்கஷ்டம் தீரும். வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் தலை வாசலுக்கு நேராக இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும்.

வலம்புரி சங்கு

வலம்புரி சங்கு

ஸ்ரீ யந்திரம் அல்லது லட்சுமி யந்திரத்தை வாங்கி வீட்டிற்குள் வையுங்கள். புல்லாங்குழல் வைத்திருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள். வாஸ்து தோஷங்கள் நீங்கும். லட்சுமி தேவியின் அருள் பெற்ற சங்கு வாங்கி வைப்பது நல்லது. அன்னை லட்சுமி தனது கையில் சங்கினை வாங்கி வைத்திருப்பது போன்ற படங்களை வாங்கி வைக்கலாம்.

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகும்.

லட்சுமி குபேரன்

லட்சுமி குபேரன்

குபேரன் சிலை வீட்டில் வைக்கலாம். குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. மணி பிளாண்ட் கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.

வானவில் ஓவியம்

வானவில் ஓவியம்

வீட்டில் வானவில் படங்களை வாங்கி வைக்கலாம். இது உங்களுக்கு அதிஷ்டத்தையும் மனதில் மகிழ்ச்சியையும் தரும். வீட்டில் தங்க மீன்களை வளர்ந்தால் உங்களை அதிஷ்டம் தேடி வரும். மகிழ்ச்சியையும், வீட்டினுள் நேர்மறை ஆற்றலையும் வீட்டிற்குள் பெருக செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+