தீபாவளி நாளில் நூற்றாண்டுகளுக்குப் பின் வரும் ராஜ யோகம்.. மகாலட்சுமியின் அருள் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது சிறப்பு. லட்சுமி குபேரரை வழிபடுவதன் மூலம் வீட்டின் பொருளாதார நிலை மேம்படும். தீபாவளி நாளில் ராஜயோகம் உருவாகி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

பணம் என்பது நம் வாழ்வின் அத்தியாவசியமான ஒன்றுதான் ஆனால் அதற்காக பணமே வாழ்க்கை கிடையாது. நாம் சில நேரங்களில் பணம் இல்லாமல் தடுமாறும் நேரத்தில் நாமே எதிர்பார்க்காமல் பெரிய பணம் நம் கையில் வரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த நம்முடைய பணமாக இருக்கலாம் அல்லது நம் நண்பர்கள் திடீரென்று உதவி செய்வார்கள் அல்லது லாட்டரி,புதையல் கூட கிடைக்கலாம். நாம் மகாலட்சுமியை வழிபட அவரது அருளால் நமக்கு எதிர்பாராத வகையில் பண வருமானம் வரும்.

Diwali Rasi Palan: Rajayogam on Diwali Day Who will get sudden luck and Jackpot

மகாலட்சுமியை வழிபட வெள்ளிக்கிழமை சிறப்பான நாள், செல்வத்திற்கு அதிபதியாக குபேரரை வழிபட வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, பூச நட்சத்திரம் சிறப்பான நாட்கள். தீபாவளி பண்டிகை நாளும் லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள். இந்த ஆண்டு தீபாவளி நாளில் மிகப்பெரிய ராஜ யோகம் உருவாகிறது.

இந்த ஆண்டு தீபாவளி தமிழ்நாட்டில் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. துலாம் ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய் பயணம் செய்ய நேர் எதிரே குரு பகவானின் சஞ்சாரம் உள்ளது. குரு சந்திர யோகம், குரு மங்கல யோகம் ஒரு பக்கம் இருந்தாலும் தீபாவளி நாளில் இந்த கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் கிடைப்பது ராஜயோகத்தை தரப்போகிறது.

மேஷம்: உங்கள் ராசியில் குரு பகவான் பயணம் செய்ய ராசிக்கு நேர் எதிரே 7ஆம் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய் கிரகங்கள் இணைந்து பயணம் செய்வதோடு மூன்று கிரகங்களின் பார்வையும் கிடைக்கிறது. மகாலட்சுமியின் அருளினால் உங்களுக்கு திடீர் வருமானம் வரும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது. மங்களகரமான தீபாவளி நாளில் உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும். புது வேலை கிடைப்பது பற்றிய நல்ல செய்தியும் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்: உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பயணம் செய்வது சிறப்பான யோகத்தை தரப்போகிறது. மனதளவிலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். புதுவித ராஜயோகத்தால் உங்களுக்கு வண்டி வாகனம் வாங்க முடிவு செய்வீர்கள். வீடு வாங்கவும் நிலம் வாங்கவும் முடிவு செய்பவர்களுக்கு தீபாவளி நாளில் பண வருமானம் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுடன் நல்ல செய்தி தேடி வரும்.
உங்களுக்கு இந்த தீபாவளி மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்க அவல் பாயாசம் செய்து நைவேத்தியம் செய்து லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது.

சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் முயற்சி ஸ்தானமான 3வது இடத்தில் செவ்வாய், சந்திரன் உடன் கூடியுள்ளதால் தீபாவளி நாளில் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வீடு, நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு முழுவதுமாக கிடைக்கிறது. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டின் மீதும் குரு பகவானின் பார்வை நேரடியாக கிடைப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்று தேடி வரும்.

மகரம்: உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் சேர்ந்திருக்க குரு பகவானின் பார்வை படுகிறது. நான்காம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்வது சுகமான நாளாக இந்த தீபாவளி அமையப்போகிறது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். வாழ்க்கை துணையின் மூலம் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. மகாலட்சுமி தேவியின் அருளால் உங்களுக்கு பொன்மழை பொழியப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+