தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி லீவு பாக்கிக்கு சம்பளத்துடன் போனஸ்! மாற போகும் சட்டம்
டெல்லி: 30 நாட்களுக்கு மேல் விடுப்பு நாட்கள் இருக்கும்போது நிறுவனமானது அந்த பணியாளருக்கு கூடுதல் விடுப்பு கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட சட்டங்களில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம், ஊதியம் குறித்த சட்டம், தொழிலகத் தொடர்புகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய 4 தொழிலாளர் சட்டங்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவை எப்போது அதிகாரப்பூர்வமானதாக வரும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறார்கள். இந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்களில் ஒன்றான தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது. இதில் பணியாளர் என்ற சொல் நிர்வாகம் அல்லது மேற்பார்வைப் பணிகளில் இல்லாத இதர பணியாளர்களையே குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிது.
இதுகுறித்து இண்டஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர் சவுமியா குமார் கூறுகையில், பாதுகாப்பு, உடல்நலம், மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 பிரிவு 32 இன் கீழ் ஆண்டுதோறும் விடுப்பு பெறுதல் ஒரு ஆண்டில் பயன்படுத்தாமல் வைத்துள்ள விடுப்பை அடுத்த ஆண்டு விடுப்பில் சேர்த்துக் கொள்ளும் வசதி, பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு பணம் பெற்றுக் கொள்வது போன்ற அம்சங்கள் தொடர்பான பல நிபந்தனைகள் உள்ளனர்.
பிரிவு 32 இல் ஒரு ஊழியர் ஆண்டில் அதிகபட்சமாக 30 விடுப்பு நாட்களை அடுதத ஆண்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது. எனவே ஆண்டின் இறுதியில் மீதமுள்ள வருடாந்திர விடுப்பு நாட்கள் 30 நாட்களை தாண்டினால் அந்த ஊழியர் விடுப்பு எடுப்பதற்கு பதிலாக பணமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது 30 நாட்களை அடுத்த ஆண்டில் எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புனித் குப்தா கூறுகையில்பாதுகாப்பு, உடல்நலம், மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 ன் படி ஒவ்வொரு ஆண்டும் மீதமுள்ள விடுப்புக்கு பணம் கொடுக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தின்படி ஊழியரின் ஆண்டு விடுப்பு காலாவதியாகாது. அவர்கள் அந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம், அல்லது பணமாக பெறாம், இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு விடுப்புடன் மீதமுள்ளதை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் தற்போது பல நிறுவனங்கள் மீதமிருக்கும் ஆண்டு விடுப்புக்கு பணம் கொடுப்பதில்லை. அடுத்த ஆண்டு அந்த விடுப்பை சேர்த்துக் கொள்வதும் இல்லை. இந்த ஆண்டு விடுப்பை அடுத்த ஆண்டு சேர்த்துக் கொள்ளுதலும் பணமாக பெறுவதும் பாதுகாப்பு, உடல்நலம், மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 படி ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது மேலாளர், நிர்வாக ரீதியிலான ஊழியர்கள், மேற்பார்வையாளர் நிலைகளுக்கு பொருந்தாது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications