For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணர் ஜெயந்தி 2022: ஆவணி அஷ்டமியில் அவதரித்த கிருஷ்ணன்..சந்தித்த சவால்கள் எத்தனை தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: ஆவணி மாதம் அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கண்ணன். பிறப்பு முதல் இறப்பு வரை சவால்களை சந்தித்து சாதித்தவர் கண்ணன். கிருஷ்ணன் என்றாலே மகிழ்ச்சியானவன். மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியோடும் உற்சாகமாகவும் வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவன். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் கண்ணன் சந்தித்த சவால்களையும் அதை அவர் எதிர்கொண்டு வெற்றி பெற்றதை பற்றியும் படிக்கலாம்.

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். பகவான் கண்ணனின் அவதாரமே அரக்கர்களை வதம் செய்வதற்காகவும் அதர்மத்தையும் அழித்து தர்மத்தை காக்கவும் நிகழ்ந்தது.

கருவில் இருக்கும் போதே பல சோதனைகளை சந்தித்தவன் கிருஷ்ணன். சவால்கள் இருந்தாலும் அதை சந்தோஷமாக சந்தித்தவன். கண்ணன் பிறந்தது முதல் வைகுண்டம் சென்றது வரை பல சவால்களை சந்தித்திருக்கிறார். ஆயர்பாடியில் குழல் ஊதிக்கொண்டு கோபியர்களுடன் உல்லாசமாக வலம் வருபவன் கண்ணன், சந்தோஷி, சுகபோகவாசி என்றுதான் கண்ணனைப் பற்றி நினைப்பார்கள்.

ஆடித் திருவிழா..குச்சனூர்,திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஆடித் திருவிழா..குச்சனூர்,திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கிருஷ்ணனின் குறும்புகள்

கிருஷ்ணனின் குறும்புகள்

கிருஷ்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனது குறும்புத்தனம் பலரையும் கவரும். கிருஷ்ணன் என்றாலே வசீகரமானவன் பக்தர்களை வசீகரிப்பவன். தலையில் மயிலிறகை சூடி நிற்பவன் கிருஷ்ணன். கண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா. ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர். ராதையை மனதில் சுமக்கும் கண்ணன், அவளை தலையில் வைத்து கொண்டாடும் விதமாகவே மயிலிறகை தலையில் சூடியுள்ளார் என்று பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே கூறியுள்ளார்.

கிருஷ்ணன் சந்தித்த சவால்கள்

கிருஷ்ணன் சந்தித்த சவால்கள்

உண்மையில் கிருஷ்ணர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று போதிக்க வந்த அவதாரம் தான்.
ஆனால் அவர் வாழ்க்கை முழுவதும் எதிர்ப்பு , சண்டை , போர் ,சூழ்ச்சி , சிக்கல் , வம்பு வழக்கு என்று எல்லா வித துன்பங்களையும் எதிர் கொண்டும் சவால்களை சந்தித்து இருக்கிறார். கிருஷ்ணருக்கு பிறப்பில் இருந்தே சிக்கல்தான். தேவகியின் கர்ப்பத்தில் ஜனிக்கும் முன்பே அவனை கொல்ல துடித்து கொண்டிருந்தான் தாய் மாமன் கம்சன். நள்ளிரவு நேரத்தில் சிறையில் பிறந்த கண்ணன் உடனே பெற்றவளை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கோகுலத்தில் மறைந்து வளர்ந்தாலும் தாய்மாமன் கம்சன் அனுப்பிய அரக்கர்களிடம் இருந்து அவர் தப்பிக்க பட்டபாடு பெரும்பாடுதான்.

எதிரிகளால் தொல்லை

எதிரிகளால் தொல்லை

கிருஷ்ணரை யாருமே நிம்மதியாக இருக்கவிட்டதில்லை. சிறுவயதிலேயே தன் எதிரிகளை மட்டுமல்லாமல் ஊர் மக்களின் பொது எதிரிகளான காலிங்கன் போன்றோரையும் ஒழித்து, பலருக்கு சாபவிமோசனம் அளித்திருகிறார். இந்திரன் கோபத்துக்கு கோகுலவாசிகள் ஆளான போது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி அவர்களை காத்து ரட்சித்தவர் அந்த பிஞ்சு பாலகன். கண்ணனை கண்டு பிடித்த கம்சன்,
முரட்டு யானை விட்டு கொல்ல முயன்றான். யானையின் வாலைப் பிடித்து சுழற்றி வீசினான் கண்ணன். அடுத்து பெரும் மல்யுத்த வீரர்களுடன் மோத வேண்டியதாயிற்று. அவர்களையும் வென்றார். கடைசியாக நடந்தது கம்சவதம். அதுவரை கண்ணன் எதிர் கொண்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

எத்தனை மனைவிகள்

எத்தனை மனைவிகள்

கிருஷ்ணருக்கு 16008 மனைவிகள் இருந்ததாக ஒரு சிலரும், அவருக்கு 8 மனைவிகள் மட்டுமே இருந்ததாக ஒரு சிலரும் நம்புகிறார்கள் இந்த எட்டு மனைவிகளின் பெயர்களில் வெவ்வேறான வேத அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன என்றாலும், பகவத புராணம் அவர்களை ருக்மிணி, சத்யபாமா, ஜம்பாவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னஜிதி, பத்ரா மற்றும் லட்சுமணா என பட்டியலிடுகிறது.

கிருஷ்ணரின் திருமணம்

கிருஷ்ணரின் திருமணம்

கிருஷ்ணரின் பட்டத்து ராணிகள் 8 பேரும் எட்டு பகுதிகளைக் கொண்ட ப்ரக்கிருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்களும், எட்டு திக்குகளும் கண்ணனில் அடக்கம். அது தவிர கிருஷ்ணன் நரகாசூரனை கொன்று 16 ஆயிரம் இளவரசிகளை மீட்டு அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 16 ஆயிரம் இளவரசிகளும் நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை குறிக்குமாம்.

ராதா கிருஷ்ணன்

ராதா கிருஷ்ணன்

என்னதான் பாமா ருக்மணி கிருஷ்ணரின் பட்டத்து ராணிகளாக இருந்தாலும் கிருஷ்ணரின் மனம் கவர்ந்த ராதைதான் கண்ணனின் அருகில் இருக்கிறார். ராதா கிருஷ்ணன்தான் பலராலும் வணங்கப்படுகின்றனர். எனவேதான் சக்தியின் அம்சமான ராதைக்கு மதிப்பு தரும் வகையில் மயிலிறகை தலை மேல் வைத்து கொண்டாடுகிறாராம் பகவான் கண்ணன்.

பாண்டவர்களுக்கு தேர் ஓட்டிய கண்ணன்

பாண்டவர்களுக்கு தேர் ஓட்டிய கண்ணன்

பாண்டவர்களுக்கு கூட பாஞ்சாலியை வைத்து சூதாடி தோற்று துன்பம் வந்த பின்பே கிருஷ்ணன் உதவியை வேண்டினர் முன்பே அவனை கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாம் முடிந்த பிறகு பாண்டவர்கள் கண்ணனின் உதவியை நாட பார்த்தனுக்கு சாரதியாக களத்தில் இறங்கினார் கண்ணன். போர்முனையில் பாண்டவர்களைக் காக்க, சூழ்ச்சி செய்ய வேண்டியதாக இருந்தது. பகவத்கீதையை கூட போர் களத்தில் நின்று தான் போதித்தார் கண்ணன்.

துவாரகையில் இறுதி நாட்கள்

துவாரகையில் இறுதி நாட்கள்

ஒருமுறை மூன்று பெரிய முனிவர்கள் துவாரகாவில் உள்ள கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்தார்கள். கிருஷ்ணர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர்களின் வருகையைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர், "நான் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வந்து விடுவேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இதற்கிடையில், அவர்களைச் சரியான மரியாதையுடனும் பக்தியுடனும் வரவேற்பு கொடுங்கள் என்றார். ஆனால் கிருஷ்ணரின் வீட்டிற்கு வந்த முனிவர்களுக்கும் துறவிகளுக்கும் கிருஷ்ணரின் உறவினர்கள் தகுந்த மரியாதையை அளிக்கவில்லை. கிருஷ்ணரின் மகன் சம்பாவின் வயிற்றில் ஒரு மண் பானையை கட்டி, அவருக்குப் புடவையை அணிவித்தார்கள். பின்னர் அவரை முனிவர்களின் முன் அழைத்து வந்தார்கள். அந்த இளைஞர்கள் முனிவர்களிடம், "இந்த பெண் கர்ப்பமாக இருக்கிறாள். தயவுசெய்து, கிருஷ்ணர் வருவதற்கு முன்பு, அவர் வயிற்றில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று சொல்ல முடியுமா? " என்று கிண்டலாகக் கேட்டனர்.

முனிவர்கள் கொடுத்த சாபம்

முனிவர்கள் கொடுத்த சாபம்

கோபம் கொண்ட முனிவர்கள் சாபம் கொடுத்தனர். எங்களை கேலி செய்யும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் வந்து விட்டதா என்று கேட்ட முனிவர்கள், இந்த கர்ப்பிணி பெண் ஒரு இரும்புக் கட்டியைப் பெற்றெடுப்பாள். இது கிருஷ்ணரின் முழு குலத்தையும் அழிக்கும் என்று சாபமிட்டனர். அந்த சாபத்தை கேட்ட கிருஷ்ணன் வருத்தமடைந்தார் என்றாலும் முனிவர்களுக்கு தேவையானவற்றை மகிழ்ச்சியுடன் கொடுத்தனுப்பினார். அதோடு காந்தாரி கொடுத்த சாபமும் கிருஷ்ணனின் நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனின் வம்சம் 36 ஆண்டுகளில் அழியுமென சபித்தாள் காந்தாரி.

 கிருஷ்ணனின் மகள்

கிருஷ்ணனின் மகள்

காலப்போக்கில் சாபம் நிறைவேற தொடங்கியது. கிருஷ்ணரின் மகன் ஒரு கனமான இரும்பு துண்டைப் பெற்றெடுத்தான். சம்பாவும் அவரது உறவினர்களும் தங்கள் அழிவு நெருங்குவதை உணர்ந்தனர். அக்ரூரா உடனடியாக இரும்பு துண்டை நல்ல தூளாக அரைத்து கடலில் எறியுங்கள் என்று கட்டளையிட்டார். இரும்பைத் தகர்த்து அதில் கூர்மையான முக்கோணத் துண்டைத் தவிர எல்லாமே தரையில் இருந்தன. யாதவர்கள் இரும்பு துண்டை தூளாக்கி அந்த துண்டைக் கடலில் எறிந்தனர். அந்த முக்கோண துண்டு ஒரு மீனால் விழுங்கப்பட்டது. மீன் ஒரு வேட்டைக்காரனால் பிடிபட்டது, அவர் மீனின் உட்புறத்தில் இருந்த துண்டைக் கண்டுபிடித்தவுடன் உடனடியாக ஒரு நச்சு அம்புக்குறியைப் பயன்படுத்தினார்.

யாதவர்கள் செய்த தவறு

யாதவர்கள் செய்த தவறு

யாதவர்கள் குடிபோதையில் பல தவறுகள் செய்ய ஆரம்பித்தனர். கடலில் வீசப்பட்ட இரும்பு துகள்கள் கரை ஒதுங்கின. அந்த கரை புற்களால் பசுமையானது. யாதவர்கள் எளிதில் தங்கள் சாபங்களை மறந்துவிட்டார்கள். துவாரகை நகரில் ஏராளமான சகுனங்கள் தோன்றின. சுதர்சன சக்ரா, பஞ்சாஜண்ய ஷாங்க், கிருஷ்ணரின் தேர் மற்றும் பலராமரின் கலப்பை போன்ற ஆயுதங்கள் பூமியிலிருந்து மறைந்துவிட்டன. யாதவர்கள் மகிழ்ச்சிக்காக கடற்கரைக்கு வந்தனர். மது போதையில் சண்டை போட்டனர். கடற்கரையில் வளர்ந்திருந்த புல் தண்டுகளை எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக் கொலை செய்தனர். முனிவர்களின் சாபம் பலிக்கத் தொடங்கியது.

மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்

மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்

கிருஷ்ணரைத் தவிர யாதவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியாக கிருஷ்ணனும் ஒரு வேடனின் விட்ட அம்பு காலில் பட மரணமடைந்து வைகுண்டம் திரும்பினார். அவரது அண்ணன் பலராமர் பாதாளம் சென்றார். பிறகு துவாரகை கடலில் மூழ்கியது. எதற்கும் கலங்காமல் கவலைப் படாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை கிருஷ்ணனின் கதைகளில் இருந்து கற்று கொள்ள முடியும். முகத்தில் எப்போதும் புன்னகை குடிகொண்டிருக்கும் கண்ணனை நினைத்தால் நம்முடைய கவலைகளும் பறந்தோடும் வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழவேண்டும் என்கிற தெம்பும் தைரியமும் பிறக்கும்.

English summary
If we think of Lord Krishna who always has a smile on his face, our worries and flying will give us the courage to live life with enthusiasm. Gogulastami 2022 this year celebrate on August 19 Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X