சார்வரி ஆண்டில் குரு தரும் ஹம்ச யோகம், விபரீத ராஜயோகம் இந்த ராசிகளுக்கு கிடைக்குமாம்
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான தனுசு ராசியிலேயோ, மீன ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவானின் உச்ச ராசியான கடக ராசியிலேயோ இருந்தாலும் அந்த ஜாதகருக்கு ஹம்ச யோகம் ஏற்படுகிறது. அதோடு 1,
சென்னை: குரு பகவான் ஒருவரின் லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் ஹம்ச யோகம் உண்டாகும். இவர்கள் இனிமையான குரல்வளம், அழகிய தோற்றம், புத்தி கூர்மை, தீர்க்காயுள் ஆகியவற்றுடன் அம்சமாக வாழ்வார்கள். குருபகவான் தரும் அற்புதமான யோகங்களில் ஹம்சயோகம் முக்கியமானது. இந்த யோகம் அமையப்பெற்றவர்களின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்கள் நிறைந்திருக்கும்.
மேஷம்,கடகம்,துலாம், மகரம் தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், லக்னகாரர்களுக்கும் ஹம்யயோகம் அமைகிறது. ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு தனம், புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும். ஹம்சயோகம் வலுவாக அமையும். குருபகவானின் தசாபுத்தி காலத்தில் பலவித நன்மைகளை கொடுக்கும்.
இப்போது குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். மார்ச் 30ஆம் தேதி அதிசாரமாக மகரம் ராசியில் சென்று நீச பங்க ராஜயோகம் பெற்றாலும் மீண்டும் தனுசு ராசிக்கு திரும்பி நவம்பர் மாதம் வரைக்கும் தனுசு ராசியில்தான் சஞ்சரிப்பார். இந்த சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு யாருக்கு ஹம்ச யோகம் அமைகிறது என்றும் விபரீத ராஜயோகம் யாருக்கு கிடைக்கிறது என்றும் பார்க்கலாம்.

செல்வமும் ஆரோக்கியமும்
அழகான தோற்றம், கூடவே செல்வாக்கு, ஆரோக்கியம், செல்வ வளம் கிடைத்தால் அவர்கள்தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள். இப்போது தனுசு ராசியில் ஆட்சி பெற்றிருக்கும் குரு பகவானால் தனுசு, மிதுனம், கன்னி, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஹம்ச யோகம் அமைந்துள்ளது.

குரு தரும் யோகங்கள்
குரு என்றாலே சுப கிரகம். குரு என்றாலே நன்மை. ஜாதகத்தில் உள்ள கெடுதல்களையும் பார்வையால் நன்மை தரும் அமைப்பாக மாற்றுபவர்.
குரு லக்னத்துடன் தொடர்பு கொள்ளும் போது அதிக நன்மை கொண்டவராக இருப்பார்கள். ரொம்ப நல்லவராகவும், எளிதில் எதையும் விட்டுக்கொடுப்பார்.
குரு பகவான் வலுவாக அமர்ந்து பார்க்கின்ற இடங்களை எல்லாம் வலுப்படுத்தி ஜாதகருக்கு நீண்ட புகழ், நிறைவான செல்வம் என அள்ளி அள்ளி கொடுப்பார்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் அபரிமிதமான நன்மைகளை செய்யப் போகிறார். மிதுனம் ராசியை குரு பகவான் பார்வையிடுகிறார். ஹம்ச யோகம் பெற்ற குருவின் பார்வை நேரடியாக ராசியின் மீது விழுவதால் நிறைய நன்மைகளை தரப்போகிறார். சனி விலகிவிட்டாலும் கூடவே கேது இருப்பதால் திருமணம், காதல் விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும்.தொழில் வளர்ச்சியடையும் லாபம் பெருகும்.

கன்னி
நான்குக்கு அதிபன் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து ஹம்ச யோகத்தை தருகிறார். நிறைய வாய்ப்புகளை தரப்போகிறார். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகத்தை தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். அம்மாவிற்கு இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இந்த சார்வரி தமிழ் புத்தாண்டடில் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்களை குருபகவான் தரப்போகிறார்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் ஹம்சயோகம் பெற்று குரு பகவான் அமர்ந்துள்ளார். ஹம்சயோகம் கொண்ட குருபகவான் மீனம் ராசிக்காரர்களுக்கு சகல அம்சத்தை தரப்போகிறார். பத்துக்கு அதிபனே பத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குருபகவானால் உங்கள் வாழ்க்கை உச்சத்திற்கு செல்லப்போகிறது. வலிமை பெற்று அமரப்போகும் குரு உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கப்போகிறார். குடும்பம் சுபிட்சமடையும். நீங்க நினைத்த காரியகங்கள் நிறைவடையும். வீடு சொத்து வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கும். கடன்கள் குறையும். எதிரிகள் தொல்லை ஒழியும். புதிய தொழில் தொடங்குவீர்கள். அந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

விபரீத ராஜயோகம்
தனுசு ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான் ரிஷபம், கடகம், மகரம், ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். கடகம் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் ரிஷபம் ராசிக்கு எட்டாம் வீட்டிலும் மகரம் ராசிக்கு 12ஆம் வீட்டிலும் குரு பகவான் ஆட்சி பெற்றிருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் குரு பகவான் தரப்போகிறார். சார்வரி புத்தாண்டில் அதிசார குரு பெயர்ச்சியால் பலன்கள் கிடைத்தாலும் தனுசு ராசியில் ஆட்சி பெற்றிருக்கும் குரு பகவான் கொடுக்கப் போகும் யோகங்களை அனுபவிக்க தயாராகுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications