குரு பெயர்ச்சி பலன்: 2024ல் குரு பார்வையால் கோடி நன்மை யாருக்கு?.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் பிறக்கப்போகிறது. மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குரு பகவானின் பார்வை ரிஷப ராசியில் இருந்து கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. குருவின் பயணம் பார்வையால் 2024ஆம் ஆண்டு முதல் திடீர் லக் மூலம் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குரு பகவான்: பொன்னவன், ஆங்கீரசன், ஜீவன் என்று வர்ணிக்கப்படுகிறார் குரு பகவான். தனகாரகன் புத்திரகாரகன் என்று போற்றப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. பிறந்த ஜாதகத்தில் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும் கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

Guru peyarachi Palan 2024: Who will get Guru Palan and Sudden luck and Jackpot

மேஷம்: இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் 2024ஆண்டு மே மாதம் மாதம் முதல் குடும்பம் பணம், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். பாக்ய ஸ்தான அதிபதியும் விரைய ஸ்தான அதிபதியுமதன குரு தனஸ்தானத்தில் வரும் பண வருமானமும் வந்து கொண்டே இருக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். பொருளாதார நிலை திருப்தி தரும். நல்ல வேலையில்லாதவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு முன்னேற்றமும் இட மாற்றமும் வரும். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்: ஜென்ம ராசிக்குள் குரு வரும் பொழுது புது முயற்சிகள் கைகூடும். தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். திருமணமாகி பிள்ளைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். 7 ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் தடைப்பட்ட திருமணம் சுபமாக நடக்கும். 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கடகம்: லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் 11ஆம் பாவத்திற்கு குரு வரப்போவதால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். குரு லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். குருவின் பார்வையால் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பகவான் பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது.

கன்னி: குரு பகவான் நான்கு மற்றும் ஏழாம் வீட்டு அதிபதி. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். 2024ஆம் ஆண்டு முதல் ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு குரு வரப்போவது நன்மையை செய்யும். ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு நோய்கள் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். குரு பகவானின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது கூடுதல் சிறப்பு. ஜந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கப்போகிறார் குரு பகவான். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும்.மன ஆழத்தம் அச்ச உனர்வு ஆகியவை நீங்கும். பூர்வ பூண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். குரு பகவான் தலங்களுக்கு சென்று வருவது நன்மையை தரும்.

விருச்சிகம்: 2024 ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து விருச்சிகம் ராசியை பார்க்கிறார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறார். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். ஏழாம் வீட்டில் அமரும் குரு பகவானால் சுபகாரியம் திருமணம் கை கூடும். ராசியை குரு பார்வையிடுவதால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் கைக்கு வரும். கடன்கள் அடைப்படும். வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.

மகரம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்க்கு வருகிறார். .இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும். கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். இத்தனைநாள் கஷ்டப்பட்டவர்கள் 2024ஆம் ஆண்டு முதல் மகிழ்ச்சியை அனுபவிக்கப்போகிறீர்கள். சுக்கிரனின் வீட்டில் குடியேறும் குரு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கப்போகிறார்.

மீனம்: குரு பகவான் உங்கள் ராசி அதிபதி மூன்றாம் வீட்டில் மறையப்போகிறார் என்றாலும் குருவின் பார்வை 7, 9, 11, இடங்களில் விழுவதால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். சண்டை போட்டு பிரிந்த தம்பதிகள் ஓன்று சேருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்விக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ராசி அதிபதியும் பத்தாம் பாவ அதிபதியும் பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+