Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி 2018-19 - கடகம் முதல் கன்னி வரை பலன்கள் - திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?

குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் மார்ச் 27ஆம் தேதி வரை விருச்சிகத்தில் இருக்கும் குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின் படி கடகம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கு பலன்களைப் பார்க்கலாம்

[குருப்பெயர்ச்சி 2018 -19: மேஷம் முதல் மிதுனம் வரை--- துலாம் முதல் தனுசு வரை --- மகரம் முதல் மீனம் வரை பலன்கள்]

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:

விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரத்தில் அக்டோபர் 11, 2018 காலை 7.39 முதல் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 12.11 வரை

விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 1211 முதல் டிசம்பர் 27, 2018 காலை 3.03 வரை

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் டிசம்பர் 27, 2018 காலை 3.03 முதல் மார்ச் 27, 2019 காலை 11.44 வரை

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் மார்ச் 27, 2019 காலை 11.44 முதல் ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 வரை

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 முதல் ஏப்ரல் 25 2019 காலை 9.53 வரை

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 25 2019 காலை 9.53 முதல் ஆகஸ்ட் 11 2019 இரவு 7:08 வரை

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 இரவு 7:08 முதல் நவம்பர் 4, 2019 மாலை 5:29 வரை குருபகவான் சஞ்சாரம் செய்கிறார்.

இந்த குரு பெயர்ச்சியினால் கடகம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன பலன்கள் என பார்க்கலாம்.

கடகம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் அமர்ந்துள்ளார்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் விஷேசங்களினால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும் வீடு களைகட்டும். திருமணம் கூடி வரும். நோய் நொடிகள் தீரும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் பயணிப்பதால் பணிச்சுமை ஏற்படும். பதற்றமும், சந்தேகமும் அதிகரிக்கும். வீண் பழி எற்படும். சிறு சிறு விபத்து ஏற்படும் என்பதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

20.12.2018 முதல் 12.03.2019 புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் திடீர் பயணங்கள், உடல்நிலை பாதிப்பு ஏற்படும். வண்டி வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வீண் விரைய செலவுகள் ஏற்படும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6ம் வீட்டில் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரைய செலவுகள் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். குலதெய்வ தரிசனம் நன்மை தரும்

09.08.2019 முதல் 27.10.2019 வரை சேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் குருவினால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.

சிம்மம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்துள்ளார்.

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், புது வண்டி வாகனம் வாங்கலாம். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யலாம். மகனுக்கோ, மகளுக்கோ திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடிப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

21.10.18 முதல் 19.12.18 வரை அனுஷ நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், மற்றவர்களிடம் நம்பிக்கையின்மை, சோர்வு ஏற்பட்டு நீங்கும். சுபச்செலவுகள் ஏற்படும். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். மறதியின் காரணமாக விலையுயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் கேட்டை நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். கடன் தொல்லை ஏற்படும். சிலர் வீண் பழி சுமத்துவார்கள் எச்சரிக்கை.

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்தில் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்ய முயற்சி செய்யலாம். நல்ல காரியங்கள் அதிகம் நடைபெறும்.

10.4.19 முதல் 18.5.19 வரை தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால்,திருமணம், கோவில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீட்டில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருக்கிறார்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்படும். வண்டி வாகனங்களினால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் பயணிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசியாதிபதியும்ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகும் அறிவு கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும்.

13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 4ஆம் வீட்டில் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் அமர்கிறார். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும். நோய்கள், பதற்றம், படபடப்பு உருவாகும்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். 09.08.2019 முதல் 27.10.2019 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் உடல் நலம் சீராகும். நட்பு வட்டம் விரிவடையும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். புதிதாக சொத்து வாங்குவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+