Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி 2018: துலாம் முதல் தனுசு வரை பலன்கள் - வெளிநாட்டு வேலை வாய்ப்பு யாருக்கு?

குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் மார்ச் 27ஆம் தேதி வரை விருச்சிகத்தில் இருக்கும் குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். மீண்டும் விருச்சிகத்திற்கு இடம்பெயர்ச்ச

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின் படி துலாம் முதல் தனுசு வரை உள்ள ராசிக்காரர்களுக்கு பலன்களைப் பார்க்கலாம்.

[குருப்பெயர்ச்சி 2018 -19: மேஷம் முதல் மிதுனம் வரை-- கடகம் முதல் கன்னி வரை--- மகரம் முதல் மீனம் வரை பலன்கள்]

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:

விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரத்தில் அக்டோபர் 11, 2018 காலை 7.39 முதல் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 12.11 வரை

விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 1211 முதல் டிசம்பர் 27, 2018 காலை 3.03 வரை

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் டிசம்பர் 27, 2018 காலை 3.03 முதல் மார்ச் 27, 2019 காலை 11.44 வரை

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் மார்ச் 27, 2019 காலை 11.44 முதல் ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 வரை

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 முதல் ஏப்ரல் 25 2019 காலை 9.53 வரை

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 25 2019 காலை 9.53 முதல் ஆகஸ்ட் 11 2019 இரவு 7:08 வரை

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 இரவு 7:08 முதல் நவம்பர் 4, 2019 மாலை 5:29 வரை குருபகவான் சஞ்சாரம் செய்கிறார்.

இந்த குரு பெயர்ச்சியினால் துலாம் முதல் தனுசு வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன பலன்கள் என பார்க்கலாம்.

துலாம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்ந்து உள்ளார். குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னை தீரும். நோய்களால் ஏற்பட்ட தொந்தரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பங்குச்சந்தைகள் மூலம் பணம் வரும். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களைப் பற்றிய வதந்திகள் பரவும் காலம் இது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் பயணிப்பதால் சொந்த பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.

20.12.2018 முதல் 12.03.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் 3ஆமிடத்தில் தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் நோய்கள் பாடாய் படுத்தும். மனைவி வழியில் செலவுகள் அதிகரிக்கும்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் செலவுகள் வரும் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கம் குறையும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். நோய்களினால் பாதிப்பு வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.

09.08.2019 முதல் 27.10.2019 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் கைக்கு வரும்.

விருச்சிகம்

ஜென்ம ராசியில் குருபகவான் அமர்ந்துள்ளார்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை விசாகம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரத்தினால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் வேலைச்சுமையோடு பதற்றமும் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. நோய்கள் பாதிப்பினால் அநாவசிய செலவுகள் ஏற்படும். வீண் விரையத்தை தவிர்க்க வீடு, வண்டி வாகனம் வாங்கலாம்.

20.12.2018 முதல் 12.03.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வாகனத்தின் மூலம் விபத்துகள் ஏற்படும் கவனம் தேவை. நோய் பாதிப்புகளால் மருத்துவ செலவு ஏற்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள். வெளிநாடு செல்ல சிலருக்கு விசா கிடைக்கும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் ராசிக்கு 2வது வீடான தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் பயணிப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன், கேரண்டி கையெழுத்து போட வேண்டாம்.

தனுசு

குருபகவான் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

04.10.2018 முதல் 20.10.2018 உங்கள் ராசி நாதன் குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு கிடைக்கும். சுப விரைய செலவுகள் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணர்ச்சி வேகத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கடன்கள் அடைபடும். இளைய சகோதரர்களினால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.

சிலர் புது வீடு மாறுவீர்கள்.

20.12.2018 முதல் 12.03.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும் நோய் பாதிப்பும் ஏற்படும். புதிதாக யாரையும் நம்பி முடிவு செய்ய வேண்டாம்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மனக்குழப்பம் ஏற்படும்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த காரியம் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை செய்து முடிப்பீர்கள். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.

09.08.2019 முதல் 27.10.2019 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+