குருப்பெயர்ச்சி 2018: மகரம் முதல் மீனம் வரை பலன்கள் - யார் புது வீடு கட்டுவாங்க
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் மார்ச் 27ஆம் தேதி வரை விருச்சிகத்தில் இருக்கும் குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். மீண்டும் விருச்சிகத்திற்கு இடம்பெயர்ச்ச
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின் படி மகரம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு பலன்களைப் பார்க்கலாம்.
[குருப்பெயர்ச்சி 2018 -19: மேஷம் முதல் மிதுனம் வரை-- கடகம் முதல் கன்னி வரை--- துலாம் முதல் தனுசு வரை பலன்கள்]

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:
விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரத்தில் அக்டோபர் 11, 2018 காலை 7.39 முதல் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 12.11 வரை
விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 1211 முதல் டிசம்பர் 27, 2018 காலை 3.03 வரை
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் டிசம்பர் 27, 2018 காலை 3.03 முதல் மார்ச் 27, 2019 காலை 11.44 வரை
தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் மார்ச் 27, 2019 காலை 11.44 முதல் ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 வரை
தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 முதல் ஏப்ரல் 25 2019 காலை 9.53 வரை
விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 25 2019 காலை 9.53 முதல் ஆகஸ்ட் 11 2019 இரவு 7:08 வரை
விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 இரவு 7:08 முதல் நவம்பர் 4, 2019 மாலை 5:29 வரை குருபகவான் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த குரு பெயர்ச்சியினால் மகரம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன பலன்கள் என பார்க்கலாம்.
மகரம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து உள்ளார்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை பலவீனமாக இருப்பது போல தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்கவும். பேச்சில் கவனம் தேவை.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் பங்குச்சந்தை மூலம் பணம் கிடைக்கும். பிரச்சினைகள் தீரும். சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் அதிகரிக்கும்.
3.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 12ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சுற்றுலா சென்று வருவீர்கள்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் பணவரவு அதிகரிக்கும் சுப விரைய செலவுகளும் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாறவேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கி லோன் கிடைக்கும்.
09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் அதிகரிக்கும். பங்குச்சந்தை மூலம் பணம் வரும்.
கும்பம்
ராசிக்கு 10வது வீட்டில் குருபகவான் அமர்ந்து உள்ளார்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கேட்ட இடத்தில் பணம் கடனானக் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் அதிகம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் செல்வாக்கு அதிகரிக்கும் பணவரவு கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும் பயணங்களினால் நன்மைகள் நடக்கும்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கடன்கள் தீரும். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். பிள்ளைகளினால் நன்மைகள் நடக்கும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 11ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும்.நோய்கள் ஏற்படும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும்.
09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் பழைய கடன்கள் தீரும். திருமணம் செய்ய முயற்சிகள் நடைபெறும்.
மீனம்
ராசிக்கு 9வது வீட்டில் குருபகவான் அமர்ந்து உள்ளார்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் புதிய வேலைகள் கிடைக்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அட்ஜஸ்ட் செய்து செல்லவும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பங்குச்சந்தையின் மூலம் பணம் வரும். ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அம்மாவின் உடல் நிலை சீராகும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வீடு, வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.
09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பேச்சில் கனிவு பிறக்கும். காரியம் கைகூடும். அம்மா வழியில் சொத்துக்கள் கைக்கு வரும்.












Click it and Unblock the Notifications