Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி 2018 -19: மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள் - புது வீடு கட்டும் யோகம் யாருக்கு?

குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் மார்ச் 27ஆம் தேதி வரை விருச்சிகத்தில் இருக்கும் குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். மீண்டும் விருச்சிகத்திற்கு இடம்பெயர்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின் படி மேஷம் முதல் மிதுனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு பலன்களைப் பார்க்கலாம்.

[குருப்பெயர்ச்சி 2018 -19: கடகம் முதல் கன்னி வரை--- துலாம் முதல் தனுசு வரை--- மகரம் முதல் மீனம் வரை பலன்கள்]

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:

குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்:

விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரத்தில் அக்டோபர் 11, 2018 காலை 7.39 முதல் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 12.11 வரை

விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில் அக்டோபர் 27, 2018 பிற்பகல் 1211 முதல் டிசம்பர் 27, 2018 காலை 3.03 வரை

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் டிசம்பர் 27, 2018 காலை 3.03 முதல் மார்ச் 27, 2019 காலை 11.44 வரை

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் மார்ச் 27, 2019 காலை 11.44 முதல் ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 வரை

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 10, 2019 இரவு 10.31 முதல் ஏப்ரல் 25 2019 காலை 9.53 வரை

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக ஏப்ரல் 25 2019 காலை 9.53 முதல் ஆகஸ்ட் 11 2019 இரவு 7:08 வரை

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 இரவு 7:08 முதல் நவம்பர் 4, 2019 மாலை 5:29 வரை குருபகவான் சஞ்சாரம் செய்கிறார்.

இந்த குரு பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் 12 ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன பலன்கள் என பார்க்கலாம்.

மேஷம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து நல்ல செய்திகள் தேடி வரும். விஷேசங்களினால் வீடு களைகட்டும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். புது வேலை கிடைக்கும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்பு, உத்யோகத்தில் வேலைச்சுமையும் எதிர்ப்புகளும் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

20.12.2018 முதல் 12.03.2019 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள் வரும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும்.

09.08.2019 முதல் 27.10.2019 வரை உள்ள காலகட்டங்களில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் குருவினால் குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. குழந்தை பாக்யம் உண்டு. வீடுகட்டும் பணி நிறைவடையும். சுப நிகர்ச்சிகள் நடைபெறும்.

ரிஷபம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் நிற்பதால் வேலைச்சுமை ஏற்படும். உடல் சோர்வுகள் வரும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வந்து செல்லும். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். புது வேலை கிடைக்கும். சிலருக்கு கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

20.12.2018 முதல் 12.03.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8ம் வீட்டில் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்திற்கு செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். பணப்பற்றாக்குறையால் இனம் தெரியாத கவலைகள் ஏற்படும்.


10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் இந்த காலக்கட்டங்களில் வீணாக டென்சன் ஏற்படும். புது வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

மிதுனம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். ஆனாலும் அச்சம் வேண்டாம்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும், வீண் அலைச்சலும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சலசலப்புகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் பணம் வரவு அதிகரிக்கும். வருமானம் உயரும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். முன்னோர்களின் சொத்துப்பிரச்சினை இந்த காலகட்டத்தில் ஒரு முடிவுக்கு வரும்.

20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. புது வண்டி வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அம்மாவின் உடவ் நலம் சீராகும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். முதல் மரியாதை கிடைக்கும். திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்து செல்லும். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். முன்கோபம் வேண்டாம். 09.08.2019 முதல் 27.10.2019 வரை புதனின் கேட்டை சஞ்சரிக்கும் குருவினால் வீட்டில் சுப நிகர்ச்சிகள் களைகட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+