குரு பெயர்ச்சி 2019-20: பரணி நட்சத்திரகாரர்களுக்கு குபேர யோகம் தரப்போகும் குரு

குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இம்மாதம் இறுதியில் நிகழப்போகிறது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் இரண்டாவதாக வரும் நட்சத்திரமான பரணி நட்சத்திரம். இந்த நட்சத்திரன் நான்கு பாதங்களும் மேஷ ராசியில் உள்ளன. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குபேர யோகத்தை அள்ளித்தரப்போகிறார்.

பரணி தரணியாளும். பரணி நட்சத்திரம் பெண் நட்சத்திரம் என்றாலும் ஆளுமை ஆண்களைப் போலவே இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ, நாட்டையும் குடும்பத்தையும் கட்டி ஆள்வார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பார்கள்.
பரணி என்பது சுகபோக சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் சுப கிரகமாக இருந்தாலும் அசுரர்களின் குல குரு. அசுர குருவான சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தேவ குரு என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

குருபகவான் தனது ராசியான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து பரணி நட்சத்திரம் இருக்கும் மேஷ ராசியை பார்க்கப் போகிறார். பல தடைகளை தாண்டுவீர்கள். ராகு திசை நடந்தால் உங்களுக்கு குரு பெயர்ச்சி அற்புத பலன்களைத் தரும். நிறைய நல்லது நடக்கும்.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

கடந்த ஓராண்டாகவே என்ன நினைத்தாலும் பலன்கள் பாதியாகவே கிடக்கிறதே என்று கடந்த ஒரு ஆண்டு காலமாக யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணம் தரும் வகையில் குரு பெயர்ச்சி வருகிறது. இறைபக்தியும், கடவுள் சிந்தனையோடு இருக்குறீர்கள். எட்டாம் இடத்தில் இருக்கிற குரு மகுடத்தை இழக்க வைத்திருக்கும். சர்வ வல்லமை பெற்றவர்களே சரிவை சந்தித்திருக்கிறீர்கள். தடைகளை தாண்டி சில சாதனைகளை செய்திருக்கிறீர்கள்.

திடீர் திருப்பங்கள்

திடீர் திருப்பங்கள்

கடந்த ஓராண்டாக குரு எட்டில் இருந்தாலும் அவரது பார்வையால் பல பலன்களும் நன்மைகளும் கிடைத்து வந்தது இனி ஒன்பதாம் வீட்டிற்கு குரு வரப்போவதால் கடவுள் அருள் தேடி வருகிறது. தசாபுத்தியும் அம்சமாக இருந்தால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார வரவும் நல்ல முறையில் இருக்கும். உத்யோகத்தில் உயர்வுகள் தேடி வரும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும்.

வியாழ நோக்கம்

வியாழ நோக்கம்

மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கு குரு பலம் வந்து விட்டது. சொந்த பந்தங்கள் தேடி வரப்போகும் காலமாகும். நிறைய பாக்கியங்கள் கிடைக்கப் போகிறது. வண்டி வாகன யோகம் வந்திருக்கிறது. வாடகை வீட்டில் வசித்தவர்கள் புது வீடுகள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு புதிய கலைகள் சித்தியாகும். படிப்பில் உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. இளைஞர்களுக்கு சிறப்பாக கால கட்டம். நிறைய சம்பளத்தில் புதிய வேலைகள் கிடைக்கும்.

பொன் பொருள் சேர்க்கை

பொன் பொருள் சேர்க்கை

பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா அதிகம் செல்வீர்கள். பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள். தொழிலில் அதிகம் லாபம் வரும். கணவன் மனைவி இடையே இருந்த கசப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகம் நடக்கும். தைரியம் அதிகம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரும்.

சுப காரியங்கள் நிகழும்

சுப காரியங்கள் நிகழும்

வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம். குரு உங்க ராசியை பார்வையிடுவதால் சுபகாரிய முயற்சிகள் நடக்கும். திருமணம் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மங்கல நிகழ்வுகள் அதிகம் நடக்கும். கெட்டிமேளச்சத்தம் கேட்கும் அதே போல மழலைச்சத்தமும் கேட்கும். சுய ஜாதகம் நன்றாக இருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குபேரனாக்கும். மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப் போகிறது. தினமும் விநாயகரையும், குல தெய்வத்தையும் வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து வாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+