குரு பெயர்ச்சி 2019-20: கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு கவலைகள் தீரும் காலம் வருது
Recommended Video
சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூன்றாவதாக வருவது கார்த்திகை நட்சத்திரம். இந்த நட்சத்திரன் முதல் பாகம் மேஷம் ராசியிலும் மீதி மூன்று பாதங்களும் ரிஷப ராசியில் உள்ளன. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி துன்பத்தை போக்கி இன்பத்தை அள்ளித்தரப்போகிறார். இதுநாள் வரை இருந்த கவலைகள் தீரப்போகிறது.
குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். அக்டோபர் 28ஆம் தேதி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான் மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

புகழ் செல்வாக்கு கூடும்
மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு கடந்த ஓராண்டு மாதமாக குரு சரியில்லாத நிலையில் இருப்பதால் தடங்கல், ஏமாற்றம் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருந்தது. குரு பெயர்ச்சிக்கு பிறகு மனக்கவலைகள் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டியில் வெற்றியும் புகழ் செல்வாக்கு அதிகரிக்கும். இழந்தது கைகூடி வரும்.

சங்கடங்கள் தீரும்
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். குரு பகவான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு சார்பான உதவிகள் கிடைக்கும். பங்காளி பிரச்சினைகள் நீங்கும்.
உங்க நட்சத்திர அதிபதியான சூரியனின் சிம்ம ராசியை குரு பார்வையிடுகிறார். பூர்வ புண்ணியம் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். உங்க சகோதர உறவில் சந்தோஷங்கள் ஏற்படும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

அஷ்டம குரு அதிர்ஷ்டமே
ரிஷபம் ராசியில் கார்த்திகை 2,3,4 ஆம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மையும் தீமையும் கலந்த பலன்களை கொடுக்கப் போகிறது. உங்களுக்கு கெட்ட காலமாகவும் இல்லாமல் நல்ல காலமாகவும் இல்லாமல் நடுவில் இருக்கிறது. காரணம் அஷ்டமத்து சனியும் கூடவே கேதுவும் இருக்கிறார் எனவே எது சொன்னாலும் குத்தமாகவே இருக்கும். நட்பை விட பகைதான் அதிகமாக வரும். குரு இப்போது சாதகமாக இருந்து உங்க நட்சத்திரத்தை பார்த்து வருவதால் தப்பி பிழைத்தீர்கள். இப்போது குருவும் அஷ்டமத்தில் அமரப்போகிறார்.

நோய்கள் தீரும்
இதுநாள் வரை இருந்த கடன் பிரச்சினை, சொந்த பந்தங்களுக்குள் ஏற்பட்ட பகை, ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை குரு பார்த்துக்கொள்வார். அரசு பதவியில் இருந்தாலும் அவஸ்தை பட்டு வந்த உங்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். குரு பகவான் தோஷங்களை போக்கி அதிர்ஷ்டத்தை தருவார்.

யோக காலம் வரப்போகுது
உங்க இரண்டாம் வீட்டில் உள்ள ராகு இனிதான் உங்களுக்கு உயிர்ப்பான பலன்களை தரப்போகிறார். உங்க குடும்ப தன ஸ்தானத்தை குரு பார்வை கிடைப்பதால் பணவரவு நல்லா இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை தீரும். சந்தோசங்கள் அதிகரிக்கும் சுப காரியங்கள் கை கூடி வரும். இனி அஷ்டமத்து சனி பிரச்சினை தரமாட்டார். கவலைகள் தீரும். கடவுளாக வந்து குரு உங்களை கை தூக்கி விடுவார். தூக்கம் கெட்டு அல்லலுக்கு ஆளானவர்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள். காரணம் உங்க ராசிக்கு மோட்ச ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுகிறது. வெளிநாடு யோகம் கைகூடி வரும்.

குருவினால் கோடி நன்மை
சுக ஸ்தானமான சிம்ம ராசியில் குரு பார்வை விழுவதால் வீடு வண்டி வாகனம் சொத்து சேர்க்கையும் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டாலும் அந்த பாதிப்புகள் தீர வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் நடக்கும், வியாழக்கிழமைகளில் இனி மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டைக்கடலை வேக வைத்து நிவேதனம் செய்யுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications