Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019: ரோகிணி நட்சத்திரத்திற்கு குரு பெயர்ச்சி எப்படி

குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப்போகிறது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Guru Peyarchi 2019

    சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் நான்காவதாக வருவது ரோகிணி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் ரிஷபம் ராசியில் உள்ளன. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

    குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். அக்டோபர் 28ஆம் தேதி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
    பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.

    அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்
    மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    தடைகள் நீங்கும்

    தடைகள் நீங்கும்

    விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். பகவான் கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம். எதுவும் நன்மைக்கே என்று நினைப்பவர்கள் நீங்கள்தான். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகளும் சின்ன சின்ன பாதிப்புகளும் ஏற்படும். ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன். குருவிற்கு சகலமும் செய்து தருபவர். எட்டாம் வீட்டில் அமர்ந்தாலும் நன்மையே செய்வார். கெடுதல் வந்தாலும் பிரச்சினை செய்ய மாட்டார். உங்க ஆசைகள் நிறைவேறும் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வேண்டுதல் எல்லாம் சின்னச் சின்ன தடைகள் இருந்தாலும் நிறைவேறும் காலம் இதுதான். சனி, கேது தடைகளை ஏற்படுத்தி வருகிறார். அஷ்டமத்து சனி ஆட்டி படைத்து வருகிறார்.

    சொத்து சேரும்

    சொத்து சேரும்

    இத்தனை நாளாய் அவஸ்தை பட்டு வருகிறார். கூடவே கேதுவும் இருந்து ஒருவித பற்றற்ற நிலையில் வாழ்ந்து வருகிறீர்கள். கவலைகள் ஆட்டிப்படைத்து வருகிறது. குரு பார்வையால் இனி உங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். மன தைரியம் அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பணம் வரும் புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

    சுப செலவுகள் ஏற்படும்

    சுப செலவுகள் ஏற்படும்

    சனி கேது குரு இணைந்து ராகுவை பார்க்கிறார். குரு சேர்க்கை பிரச்சினை தருவதில்லை. நெருக்கடிகள் தீரும். குரு உங்க விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சுப செலவுகள் ஏற்படும். திருமணம், கல்விக்காக செலவு செய்வீர்கள். மன திருப்தி ஏற்படும். இதுநாள் வரை தூக்கமின்றி தவித்த உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும். இதுநாள் வரை இருந்த குறைகள் நீங்கும். உங்க இரண்டாம் வீடான தன வாக்கு ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் நல்லது நடக்கும்.

    ஆன்மீக பயணங்கள்

    ஆன்மீக பயணங்கள்

    சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுகம் கூடும் பொருளாதாரத்தை வைத்து சொத்து சுகம் வாங்குவீர்கள். வேண்டியது நடக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். உங்களுக்கு கெடுதல் ஏற்படுவது போல இருந்தாலும் குரு அதை தடுப்பார். சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் குருவினால் நல்லது நடக்கும். சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களின் தவற்றைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது.

    படிப்பில் கவனம்

    படிப்பில் கவனம்

    மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யுங்கள். எதையும் யோசித்து பேசுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நன்றாக படித்து எழுதி பாருங்கள். சக மாணவர்களுடன் கவனமாக பழகுங்கள். பிரதோஷ காலத்தில் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுங்கள். நெருக்கடிகள் ஏற்பட்டாகூம் குருபகவான் அந்த பிரச்சினைகளை தீர்ப்பார். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்திக்கு நடைபெறும் யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்யலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+