குரு பெயர்ச்சி 2020:திருமணம்,குழந்தை பாக்கியம் தரும் குரு பலம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வரும்
நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் சிலருக்கு குரு பலம் கூடி வரப்போகிறது. திருமண யோகமும், குழந்தை பாக்கிய வரமும் கிடைக்கப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். கொரோனா வைரஸ் பரவல் பற்றி அச்சம் இருந்தாலும் திருமணம் நடைபெறுவது எங்கும் நிற்கவில்லை. குழந்தை பிறப்பு ஒன்றும் தடைபடவில்லை குரு பலம் இருப்பவர்களுக்கு நல்ல காரியங்கள் தடைபடாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நவம்பர் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு குருபலம் கூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
தற்போது தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் நவம்பர் மாதத்தில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார் இது குரு நீச்சம் அடையும் வீடு என்றாலும் கூடவே ஆட்சி பெற்ற சனியோடு இணைந்து நீசபங்கமடைந்து சஞ்சரிப்பதால் சிலருக்கு ராஜயோகமும் கிடைக்கும்.
குரு பார்வை கோடி புண்ணியம் குரு அமரும் இடத்தை போல குரு பார்வை குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தின் மீது விழும் போது திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் உருவாகி இல்லற பந்தத்தில் இணையும் யோகம் நமக்கு இருக்கிறதா என்று ஆசையோடு பலரும் ராசி பலன்களை படித்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி தேதி
மகரம் ராசியில் ஐப்பசி 30ஆம் தேதி அதாவது நவம்பர் மாதம் 15ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி அதாவது நவம்பர் 20ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. மகரம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று கும்பம் ராசிக்குஇடப்பெயர்ச்சியாகிறார்.

குரு சஞ்சரிக்கும் இடங்கள்
இந்த குரு பெயர்ச்சியால் மேஷம் தொழில் குரு, ரிஷபம் பாக்ய குரு, மிதுனம் அஷ்டம குரு, கடகம் களத்திர ஸ்தான ஸ்தான குரு, சிம்மம் ருண ரோக சத்ரு ஸ்தான குரு, கன்னி பூர்வ புண்ணிய குரு, துலாம் சுக ஸ்தான குரு, விருச்சிகம் தைரிய குரு, தனுசு குடும்ப தன வாக்குஸ்தான குரு மகரம் ஜென்ம குரு, கும்பம் விரைய குரு, மீனம் லாப குரு, என நவம்பர் முதல் குருவின் சஞ்சாரம் அமையப்போகிறது. குருவின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது.

குரு பார்வை தரும் யோகம்
குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். மகரம் ராசியில் அமரும் குரு பகவான் தனது பொன்னொளி பார்வையால் ரிஷபம்,கடகம்,கன்னி ராசிகளை பலமடையச் செய்கிறார். குருபகவான் பொதுவாக ராசியில் அமரும் போதோ அல்லது 2,5,7,9,11 ஆகிய இடங்களில் அமரும் போதோ முதல்தர குரு பலம் வந்து விட்டதாக கூறலாம். அதே போல 3, 8, 10 ஆகிய இடங்களில் அமரும் போது இரண்டாம் தர குரு பலம் வந்து விட்டதாக சொல்லலாம்.

கெட்டி மேளம் கொட்டும்
இந்த முறை தனுசு, மகரம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி, ராசிக்காரர்களுக்கு அற்புதமான குருபலம் காரணம் குடும்ப குரு, ஜென்மகுரு, லாப குரு, பாக்ய குரு, களத்திர குரு, பூர்வ புண்ணிய குரு என இந்த ராசிகளில் குரு சஞ்சரிக்கிறார். இதனால் சிங்கிள்ஸ் ஆக இருக்கிற இந்த ராசிக்காரங்க இனி மிங்கிள்ஸ் ஆகப்போகிறீர்கள். அதேபோல புத்திர பாக்கியமும் தேடி வரப்போகிறது.

ராஜயோக காலம்
ஜென்ம ராகு ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். நவம்பர் மாதம் குருவின் பார்வையும் ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசியோடு அற்புதமான ராஜ யோகம் கிடைக்கும். ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை ரிஷபத்தின் மீது விழுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

களத்திர குரு
கடகம் ராசிக்கு குரு ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை குரு பார்ப்பதால் மனதிற்குப் பிடித்த மனைவி அமைவாள். சந்தான பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும்.

பூர்வ புண்ணிய குரு
கன்னி ராசிக்கு குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக உங்க ராசியை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் உங்களுக்கு இந்த முறை குரு பலன் வந்திருக்கிறது. திருமண யோகம் கை கூடி வருகிறது. அதே போல புத்திர பாக்கியமும் கிடைக்கப் போகிறது.

குடும்ப உறவு உற்சாகம்
மகரம் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்வதோடு அவர் பார்வை ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களின் மீது விழுவதால் திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதே போல தனுசு ராசிக்கு குடும்ப குருவாக இருப்பதால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். தசாபுத்தி நன்றாக இருந்தால் திருமண யோகமும் கை கூடி வரும்.

லாப குரு பார்வை
குருபகவான் மீனம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications