குரு பெயர்ச்சி 2022: தீபாவளிக்கு பிறகு இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும்!
சென்னை: குரு பகவான் தீபாவளி முடிந்து வக்ர நிலையில் இருந்து தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார். தற்போது வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு நவம்பர் 16ஆம் தேதி முதல் நேர்கதியில் மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குரு பகவானின் சஞ்சாரம்,வக்ர நிவர்த்தி, இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மிதுனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது. யாருக்கெல்லாம் 2023ஆம் ஆண்டில் குபேர யோகம் தேடி வரப்போகிறது. திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் சுப கிரகம். ஒருவரின் வாழ்க்கையை சுபத்துவமாக்கக் கூடியவர். குருபகவானின் பார்வை எத்தனையோ நன்மைகளை ஒருவரின் வாழ்க்கையில் செய்யும். மனித வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களாக உள்ள வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகளை கிடைக்கக் செய்பவர் குரு பகவான். எனவேதான் குரு பெயர்ச்சி எப்போது நடைபெறும் குரு பலன் வந்து விட்டதா என்று பலரும் கேட்கின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஓராண்டுகள் எடுத்துக்கொள்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளை கடக்க 12 ஆண்டுகள் ஆகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தற்போது தனது வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குரு பகவான் சிலருக்கு ஹம்ச யோகத்தை தேடி தருவார். நவம்பர் மாதம் முதர் ஆறு மாதங்களுக்கு குரு பகவான் மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வக்ர நிலையில் பயணித்த குருவினால் கடந்த சில மாதங்களாக பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு நல்ல நேரம் வரப்போகிறது. யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணிக்கும் குரு பகவான் தீபாவளிக்குப் பிறகு நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். கடந்த சில மாதங்களாக இருந்த மனச்சோர்வு, அழுத்தம், வேலைப்பளு முடிவுக்கு வரப்போகிறது. நவம்பர் 16 முதல் உங்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளின் படிப்பு, திருமணத்திற்காக கடன் வாங்குவீர்கள். நிறைய வருமானம் வந்தாலும் கூடவே சுப செலவுகளும் துரத்தும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் வரலாம்.

பண விசயத்தில் கவனம்
யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கித்தர வேண்டாம். உங்களுடைய ரகசியங்களை குடும்ப உறுப்பினர்கள் தவிர யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளிநாடு பயணம் வெற்றிகரமாக ஆரம்பிக்கும். தொழில் வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாலும். டிசம்பர் முதல் ஏப்ரல் வரைக்கும் அதிர்ஷ்ட தேவதையின் அருள் மழையில் நனையப்போகிறீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். எதையும் நிதானமாக ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு உங்களுக்கு நிறைய லாபத்தையும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் தரப்போகிறார். பங்குச்சந்தை முதலீடுகளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களால் வீடு களைகட்டும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள். லாட்டரி, ரேஸ் மூலம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

பண மழையில் நனைவீர்கள்
அதிர்ஷ்ட தேவதையின் அருளினால் பண மழையில் நனையப்போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் வரப்போகிறது. 2023ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பாராத மிகப்பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்தில் வேலை தேடி வரும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே..குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு குரு பயணம் சாதகமாகவே உள்ளது. தீபாவாளிக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அஷ்டமத்து சனியும் உங்களை விட்டு விலகப்போகிறார் எனவே அதிர்ஷ்ட மழை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. திடீர் பண வரவினால் உங்களுக்கு சுப காரிய செலவுகளும் வரும்.

அஷ்டமத்து சனி விலகல்
ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். 2023ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த காலங்களாக மாறப்போகிறது. நீங்கள் எதிர்பாராத மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அதை அனுபவிக்கத் தயாராகுங்கள். வேலை தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அகலக்கால் வைத்து அவதிப்பட வேண்டாம் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications