குரு பெயர்ச்சி 2022: குருவின் பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்

குருபகவானின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் குருபகவானின் பயணத்தாலும் பார்வையாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது அதிர்ஷ்டமும் பண வரவும் கோடீஸ்வர யோகமும் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் சுப கிரகம்... பொன்னவன் என்று போற்றப்படும் குருபகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் பயணம் செய்வார். கடந்த சில ஆண்டுகாலமாகவே அதிசாரம், வக்ரம், நேர் பயணம் என மூன்று ராசிகளில் பயணம் செய்தார். இனி குருபகவானின் பயணம் மீன ராசியில் இருக்கப்போகிறது.

சனிபகவானின் வீடான கும்ப ராசியில் பயணம் செய்யும் குருபகவான் இனி தனது சொந்த வீடான மீன ராசியில் ஓராண்டு காலம் பயணம் செய்யப்போகிறார். இங்கிருந்து குருபகவானின் பார்வை சில ராசிகளின் மீது விழுகிறது. குரு அமர்ந்த இடத்தினாலும் குருவின் பார்வையாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கோடி நன்மை தரும் குருவின் பார்வை

கோடி நன்மை தரும் குருவின் பார்வை

குரு அமர்ந்த இடத்தை விட குரு பார்க்கும் இடங்கள்தான் அதிக பலன் கிடைக்கும். கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருபகவானின் பார்வை இந்த முறை கடகம், கன்னி, விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. தனது ஐந்தாம் பார்வையாக கடக ராசியையும், சம சப்தம பார்வையாக ஏழாம் வீடான கன்னி ராசியையும், ஒன்பதாம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார் குருபகவான்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ள குருபகவான் இனி லாப ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஜென்ம ராகுவும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டதால் மனக்குழப்பங்கள் நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுவதால் முயற்சிகள் பலிதமாகும். திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

கும்பம் குடும்ப குரு

கும்பம் குடும்ப குரு

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக பயணித்த குருபகவான் இனி இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி குடும்ப குருவாக பயணம் செய்யப்போகிறார். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். ராகுவின் பயணமும் சாதகமாக உள்ளதால் பல வழிகளில் இருந்தும் பணம் வரும். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. பொன்நகை சேர்க்கை அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறு,எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் விலகும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்த குருபகவான் இனி ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருபகவான் அமர்ந்த இடம் அற்புதமான இடம். அதே போல குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சலில் இருந்து மீள்வீர்கள். பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது. உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீடுகளின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் நடைபெறும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே கவலையோடு இருந்த உங்களுக்கு சந்தோஷமும் மன நிம்மதியும் கிடைக்கப்போகிறது. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ராகு கேதுவின் பயணத்தினாலும் உங்களின் பிரச்சினைக்கு முடிவுக்கு வரப்போகிறது. கொடுத்து ஏமாந்து போன பணம் வீடு தேடி வரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும. குருவின் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு வரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் ராசியின் மீது குருபகவானின் பார்வை விழுகிறது. குருவின் பார்வையால் கடந்த சில ஆண்டுகாலமாக பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. ஏழரை சனியால் பட்ட கஷ்டமும், ஜென்ம குருவினால் ஏற்பட்ட மனக்குழப்பங்களும் நீங்கப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது நன்மை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியம் நலமடையும். ஆன்மீக பயணம் செல்வீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+